TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 1 , 2026 4 days 52 0
  • ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்ற 2026 ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் ஆடவருக்கான நீளம் தாண்டுதலில் இந்தியாவின் முரளி ஸ்ரீசங்கர் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
  • பிளாஸ்டினேஷன் (plastination) முறையைக் கண்டுபிடித்தவரும், BODY WORLDS கண்காட்சிகளை உருவாக்கியவருமான டாக்டர் குந்தர் வான் ஹேகன்ஸ் 2026 ஆம் ஆண்டு ஜூலை 24 அன்று தனது 81 ஆவது வயதில் காலமானார்.
    • பிளாஸ்டினேஷன் என்பது உடல் திரவங்கள் மற்றும் கொழுப்புகளுக்குப் பதிலாக பாலிமர்களைக் கொண்டு மாற்றி, நீண்ட கால ஆய்வுகளுக்காக உடற்கூறியல் மாதிரிகளைப் பாதுகாக்க உதவும் ஒரு முறையாகும்.
  • அமெரிக்கா முதன்முறையாக குவாமில் (Guam) டார்க் ஈகிள் அதிமீயொலி எறிகணை அமைப்பை நிறுவியுள்ளது.
    • நீண்ட தூரம் செல்லக்கூடிய அதிமீயொலி ஆயுதம் (LRHW) என்றும் அழைக்கப்படும் டார்க் ஈகிள், அமெரிக்க ராணுவத்திற்காக உருவாக்கப்பட்ட அணுஆயுதமற்ற, தரையிலிருந்து ஏவப்படும் அதிமீயொலி எறிகணை அமைப்பாகும்.
  • இந்திய அறிவியல் வளர்ச்சிக் கழகமானது (IACS) 2026 ஆம் ஆண்டு ஜூலை 29 அன்று நிறுவப்பட்டு 150 ஆண்டுகளை நிறைவு செய்தது.
    • இந்தியர்களின் அறிவியல் ஆராய்ச்சிக்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்தியாவின் முதல் தேசிய நிறுவனமாக 1876 ஆம் ஆண்டில் கொல்கத்தாவில் மகேந்திரலால் சர்க்கார் என்பவரால் IACS நிறுவப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்