TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 6 , 2026 16 hrs 0 min 5 0

 

  • அசாம் மாநிலத்தின் கோல்பாரா மாவட்டத்தில் தோண்டப்பட்ட கிணறுகளுடன் இணைக்கப்பட்ட நிலத்தடி நீர்நிலைகளில் ‘ரக்தமிக்திஸ் அஞ்சி’ (Rakthamichthys anchi) என்று பெயரிடப்பட்ட பார்வையற்ற, இரத்தச் சிவப்பு நிற விலாங்கு மீனின் புதிய இனம் ஒன்றை அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
    • இந்த இனம் ரக்தமிக்திஸ் பேரினத்தைச் சேர்ந்ததுடன், இது இந்தியாவுக்கே உரிய நிலத்தடி சதுப்புநில விலாங்கு மீன்களின் குழுவாகும்.
  • தொல்லுயிரியல் ஆய்வாளர் வர்ஷா அசோக் அக்லாவே, இந்திய நிலவியலாய்வு மையத்தின் (GSI) 176 ஆண்டுகால வரலாற்றில் அதன் முதல் பெண் தலைமை இயக்குநராக (DG) பதவியேற்றுள்ளதோடு இவர் ஆசித் சஹாவிற்குப் பிறகு 54வது தலைமை இயக்குநராக பொறுப்பேற்றுள்ளார்.
  • ஆந்திரப் பிரதேசத்தின் போகாபுரத்தில் உள்ள அல்லூரி சீதாராம ராஜு சர்வதேச விமான நிலையத்தில் 13,000-க்கும் மேற்பட்ட பழங்குடியினப் பெண்கள் மற்றும் மாணவிகள் ‘திம்சா’ (Dhimsa) நடனமாடி, மிகப்பெரிய திம்சா நடனத்திற்கான கின்னஸ் உலக சாதனையை படைத்தனர்.
  • இந்தியாவின் பகிர்ந்தளிக்கப்பட்ட சூரியசக்தித் திறன் 2026 ஆம் நிதியாண்டில் 31.5 ஜிகாவாட் (GW) ஆக அதிகரித்துள்ளது, இது 2018 ஆம் நிதியாண்டில் இருந்த 1.8 ஜிகாவாட்டில் இருந்து 17 மடங்குக்கும் மேலான அதிகரிப்பாகும்.
    • மேற்கூரை சூரியசக்தித் திறன் 1.1 ஜிகாவாட்டில் (2018 ஆம் நிதியாண்டு) இருந்து 25.7 ஜிகாவாட்டாக (2026 ஆம் நிதியாண்டு) அதிகரித்துள்ளது, அதே வேளையில் PM-KUSUM திட்டத்தின் கீழ் சூரியசக்தி நீரேற்றிகளின் திறன் 5.8 ஜிகாவாட்டை எட்டியுள்ளது.
  • போபாலில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி சபை (ICAR) - தேசிய உயர் பாதுகாப்பு விலங்கு நோய்கள் நிறுவனமானது (NIHSAD), பன்றிகளுக்கான இந்தியாவின் முதல் உள்நாட்டு 'MA-104' செல் வரிசையை அடிப்படையாகக் கொண்ட, வீரியம் குறைக்கப் பட்ட ஆப்பிரிக்கப் பன்றிக் காய்ச்சலுக்கான (ASF) தடுப்பூசியை உருவாக்கி உள்ளது.
    • ஆப்பிரிக்கப் பன்றிக் காய்ச்சல் (ASF) என்பது ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் வைரஸால் (ASFV) ஏற்படும் மிகவும் தொற்றுத்தன்மை வாய்ந்த வைரஸ் நோயாகும், இது வீட்டு மற்றும் காட்டுப் பன்றிகளைப் பாதிக்கிறது, இதன் இறப்பு விகிதம் 100% ஐ எட்டும் அபாயம் கொண்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்