TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 11 , 2026 2 days 84 0
  • உத்திசார் படைகள் கட்டளையின் (SFC) கீழ் ஒடிசாவின் சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை வரம்பில் (ITR) இருந்து அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் திறன் கொண்ட அக்னி-4 நடுத்தர தூர உந்துவிசை எறிகணையை (Agni-4 MRBM) இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்தது.
    • இரண்டு நிலைகளைக் கொண்ட, திட எரிபொருள் எறிகணையான அக்னி-4 சுமார் 4,000 கி.மீ தூரம் வரை தாக்கக்கூடியது மற்றும் சுமார் 1,000 கிலோ எடையைச் சுமந்து செல்லும் திறன் கொண்டது.
  • 2026 ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் பிரிக்ஸ் (BRICS) தலைமையின் கீழ் 13-வது பிரிக்ஸ் கல்வி அமைச்சர்கள் கூட்டம் ஒடிசாவின் புவனேஸ்வரில் நடைபெற்றது.
    • இக்கூட்டமானது ஆரம்பகால குழந்தை பராமரிப்பு மற்றும் கல்வி (ECCE), தொழில் நுட்ப மற்றும் தொழிற்கல்வி மற்றும் பயிற்சி (TVET), திறன் மேம்பாடு, ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு, தகுதிகளைப் பரஸ்பரமாக அங்கீகரித்தல் மற்றும் கல்வித் தலைமை ஆகியவற்றில் கவனம் செலுத்தியது.
  • இமாச்சலப் பிரதேசத்தின் டல்ஹவுசி வனக்கோட்டத்தில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப் பிறகு அரிய வகையான இமயமலை சீரோ (கேப்ரிகார்னிஸ் தார்) பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • வாழ்விட சீரழிவு, துண்டாக்கம் மற்றும் வேட்டையாடுதல் காரணமாக இது பன்னாட்டு இயற்கை பாதுகாப்புச் சங்கத்தின் (IUCN) செந்நிறப் பட்டியலில் "அச்சுறுத்தல் நிலையை அண்மித்த இனமாக" இடம்பெற்றுள்ளது.
  • இந்திய தொழில்நுட்பக் கழகம் ஹைதராபாத் மற்றும் கிரிம்சன் எனர்ஜி எக்ஸ்பர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் இணைந்து 'அனுக்ஞான்' (ANUGYAN - அணுசக்தித் தொழில்நுட்ப அறிமுக நிகழ்ச்சி) என்ற மூன்று மாத உறைவிடப் பயிற்சியை அறிமுகப் படுத்தியதுடன் சிவில் அணுசக்தி நிபுணர்களுக்கான இந்தியாவின் முதல் தொழில் துறை-கல்வித்துறை பாடநெறி இதுவாகும்.
  • பெங்களூரைச் சேர்ந்த ஆஸ்ட்ரோபேஸ் ஸ்பேஸ் டெக்னாலஜிஸ் (Astrobase Space Technologies) நிறுவனமானது, இந்தியாவின் முதல் தனியார் 800-கிலோநியூட்டன் (kN) முழு-ஓட்ட நிலை எரிப்பு (FFSC) ஏவுகல இயந்திரமான 'எவரெஸ்ட்' (EVEREST) என்பதை அறிமுகப்படுத்தியது.
  • மகாராஷ்டிராவின் சோமையா வித்யாவிகார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற FISU (சர்வதேச பல்கலைக்கழக விளையாட்டு கூட்டமைப்பு) உலக பல்கலைக்கழக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் தனிநபர் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை இந்திய ஸ்குவாஷ் வீரர் சூரஜ் குமார் சந்த் பெற்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்