TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 12 , 2026 21 hrs 0 min 40 0
  • வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (APEDA), பீகாரிலிருந்து புவிசார் குறியீடு பெற்ற மிதிலா மக்கானாவை ஆஸ்திரேலியாவிற்கு கடல் வழியாக முதல் முறையாக வணிக ரீதியாக ஏற்றுமதி செய்வதற்கு ஏற்பாடு செய்துள்ளது.
    • 2022 ஆம் ஆண்டில் புவிசார் குறியீட்டைப் (GI) பெற்ற, பீகாரின் மிதிலா பகுதியில் முக்கியமாக உற்பத்தி செய்யப்படுகின்ற மிதிலா மக்கானா என்பது நீர்வாழ் தாமரை விதை (Fox nut) ஆகும்.
  • 11வது பிரிக்ஸ் கலாச்சார அமைச்சர்கள் கூட்டம் மத்தியப் பிரதேசத்தின் போபாலில், போபால் பிரகடனத்தை ஏற்றுக் கொண்டதன் மூலம் முடிவடைந்தது.
    • போபால் பிரகடனமானது, கலாச்சாரம் மற்றும் ஆக்கப்பூர்வமான துறைகளில் பிரிக்ஸ் நாடுகளின் பொதுவான அர்ப்பணிப்புகளைப் பதிவு செய்கிறது.
  • இந்தியாவில் கடல்சார் நிர்வாகத்தை டிஜிட்டல் மயமாக்குவதற்காக ‘மின்னணு-சமுத்ரா’ (E-Samudra) டிஜிட்டல் தளம் மும்பையில் தொடங்கப்பட்டது.
    • இது 72க்கும் மேற்பட்ட சேவைகளை ஒருங்கிணைத்து, மாலுமிகள், கப்பல் நிறுவனங்கள் மற்றும் துறைமுகங்களுக்கான ஒற்றை டிஜிட்டல் சாளரமாகச் செயல்படுகிறது.
  • அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி சபை - தேசிய தாவரவியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் (CSIR-NBRI) முதல் சுற்றுச்சூழல் கல்வி மையமான ‘பிரகிருதி ஞான் தாம்’ (Prakriti Gyan Dham), உத்தரப் பிரதேசத்தின் லக்னோவில் திறக்கப்பட்டது.
    • பல்லுயிர் தன்மை பாதுகாப்பு, சுற்றுச்சூழல் கல்வி மற்றும் இந்தியாவின் தாவரவியல் பாரம்பரியம் ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக பந்த்ராவில் உள்ள மகரிஷி பராஷர் உயிர்வள மையத்தில் இது உருவாக்கப்பட்டது.
  • மேகாலயாவின் ரி போயிக் மாவட்டத்தில் உள்ள ஜிராங்கில் ‘ருசுலா கிரிசோபுர்புராடா’ (Russula griseopurpurata) என்ற புதிய காளான் இனத்தை அறிவியலாளர்கள் கண்டறிந்து உள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்