TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 13 , 2026 12 days 113 0
  • நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் (UCBs) நவீன வங்கி தொழில்நுட்பத்தை பின்பற்றுவதற்கு உதவும் வகையில், மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் மகாராஷ்டிராவின் மும்பையில் 'பேங்க் இன் எ பாக்ஸ்' (Bank in a Box) என்ற சேவையைத் தொடங்கி வைத்தார்.
    • இது மைய வங்கி, டிஜிட்டல் பரிவர்த்தனைகள், மேகக் கணினி சேவைகள் மற்றும் ஒழுங்குமுறை இணக்கம் ஆகியவற்றை வழங்கும் ஒரு ஒருங்கிணைந்த தொழில்நுட்பத் தளமான இது சிறிய மற்றும் ஒற்றைக் கிளை கொண்ட நகர்ப்புறக் கூட்டுறவு வங்கிகள் கூட பெரும் தொழில்நுட்ப முதலீடுகள் இன்றி நவீன வங்கி சேவைகளை வழங்க உதவுகிறது.
  • 8-வது இந்தியக் கடற்படை-அமெரிக்கக் கடற்படை (IN-USN) வெடிபொருள் செயலிழக்கச் செய்யும் (EOD) கூட்டுப் பயிற்சி 2026 ஆனது, கேரளாவின் கொச்சியில் உள்ள தெற்கு கடற்படைத் தளத்தில் நடைபெற்று வருகிறது.
  • வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் (APEDA) உதவியுடன், திரிபுரா 1 மெட்ரிக் டன் அளவிலான முதல் கடுகுத் தேன் ஏற்றுமதியை துபாய்க்கு அனுப்பியது.
  • இந்திய வானிலை ஆய்வு மையமானது (IMD) 2026 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் உள்ள புல்பள்ளியில் எக்ஸ்-பேண்ட் டாப்ளர் வானிலை கண்காணிப்பு ரேடாரை நிறுவ உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்