TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 15 , 2026 4 days 106 0
  • 2026 ஆம் ஆண்டிற்கான ருமேனியாவின் புக்கரெஸ்ட் நகரில் நடைபெற்ற 23-வது சர்வதேச மொழியியல் ஒலிம்பியாட் (IOL) போட்டியில் இந்தியா ஒரு தங்கம், மூன்று வெண்கலப் பதக்கங்கள் மற்றும் ஒரு கௌரவக் குறிப்பை வென்றது.
    • ஸ்ரீலக்ஷ்மி வெங்கட்ராமன் தனிநபர் தங்கப் பதக்கத்தையும், ஆரவ் அனில் ராவ், நிஷாந்த் சங்கர் லட்சுமணன் மற்றும் அத்வே மிஸ்ரா ஆகியோர் வெண்கலப் பதக்கங்களையும் வென்றனர்.
  • உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்ட ஷாச்சி வகுப்பைச் சேர்ந்த அடுத்த தலைமுறை கடல் ரோந்து கப்பலான (NGOPV) 'யார்டு 3037 சுருதி' (Yard 3037 Shruti), கொல்கத்தாவில் உள்ள கார்டன் ரீச் ஷிப்பில்டர்ஸ் & இன்ஜினியர்ஸ் (GRSE) நிறுவனத்தில் இந்திய கடற்படைக்காக தொடங்கப்பட்டது.
  • 15 ஆண்டுகளுக்கும் மேலான ஆராய்ச்சிக்குப் பிறகு வடகிழக்கு இந்தியாவின் திரிபுராவில் இருந்து அம்மாச்சி அடுக்குத் தவளை (அமோலோப்ஸ் அம்மாச்சி), நாகாலாந்தில் இருந்து சென்டென்யு அடுக்குத் தவளை (அமோலோப்ஸ் சென்டென்யு) மற்றும் மேற்கு வங்கத்திலிருந்து அழகான அடுக்குத் தவளை (அமோலோப்ஸ் பெல்லா) ஆகிய மூன்று புதிய அடுக்குத் தவளை இனங்களை அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
    • இந்த ஆய்வானது இந்தியாவில் முதல்முறையாக ஐந்து அடுக்குத் தவளை இனங்களைப் பதிவு செய்துள்ளது, இது அமோலோப்ஸ் பேரினத்தின் அறியப்பட்ட பன்முகத்தன்மையை விரிவுபடுத்துகிறது.
  • அரிய வகை தனிமைப்படுத்தப்பட்ட இமயமலை தேனீயான 'கொலெட்ஸ் பூட்டானிகஸ்' (Colletes bhutanicus) அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் மாவட்டத்தில் இந்தியாவில் முதல்முறையாகப் பதிவு செய்யப்பட்டது.
  • இந்தியாவின் முதல் தனியார், முத்திரையிடப்பட்ட ரயிலான லக்னோ-டெல்லி தேஜாஸ் எக்ஸ்பிரஸ், 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19 முதல் 2026 ஆம் ஆண்டு நவம்பர் 11 வரை ‘ஸ்ப்ரைட்’ தேஜாஸ் எக்ஸ்பிரஸாக (Sprite Tejas Express) இயங்கும்.
  • முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் வாழ்க்கைப் பயணம், போராட்டங்கள் மற்றும் பொதுச் சேவையை உள்ளடக்கிய அவரது சுயசரிதையான “Triumph of the Indian Republic: My Life, My Struggles” என்ற புத்தகத்தை இந்தியப் பிரதமர் புது தில்லியிலுள்ள விக்யான் பவனில் வெளியிட்டார்.
  • இளைஞர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 12 அன்று சர்வதேச இளைஞர் தினம் அனுசரிக்கப் படுகிறது.
    • 2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு Different Contexts, Common Aspirations என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்