TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 21 , 2026 5 days 93 0
  • இமாச்சலப் பிரதேசம் மற்றும் லடாக் இடையே 5,578 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள பரங் லா கணவாயைக் கடக்கும் வகையில், 28 பெண் என்.சி.சி (தேசிய மாணவர் படை உறுப்பினர்கள்) பங்கேற்கும் 250 கி.மீ தொலைவு கொண்ட 'அபராஜிதா - பரங் லா 2026' மலையேற்றப் பயணத்தை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார்.
    • பரங் லா கணவாய் என்பது டிரான்ஸ்-இமயமலைப் பிராந்தியத்தில் அமைந்துள்ள ஒரு அதி உயரக் கணவாயாகும்; இது இமாச்சலப் பிரதேசம் மற்றும் லடாக்கை இணைக்கும் முக்கியப் புவியியல் அம்சமாகும்.
  • துபாயைச் சேர்ந்த 16 வயதான லட்சுமணன் மெய்யப்பன், 16 ஆண்டுகள் 141 நாட்களில் உலகின் மிகவும் இளைய வயது ஆண் பட்டயக் கணக்காளர் என்ற கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளார்.
  • போட்டித் தேர்வுகளுக்குத் தயாரிக்கும் மாணவர்களுக்காக ₹20 லட்சம் செலவில் 'வெற்றிப் பாதை' செயலியை தமிழ்நாடு அரசு உருவாக்கவுள்ளது.
    • இச்செயலி பணியாளர் தேர்வாணையம் (SSC), ரயில்வே தேர்வு வாரியம் (RRB), வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம் (IBPS) மற்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆகியவை நடத்தும் தேர்வுகளை உள்ளடக்கும்.
  • தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு (MLAs) அதிகாரப்பூர்வ வாகனங்கள் மற்றும் எரிபொருள், ஓட்டுநர் மற்றும் வாகனச் செலவுகளுக்காக ₹75,000 உட்பட மாதம் ₹1 லட்சம் படி வழங்கப்படும் என அறிவித்து உள்ளார்.
    • மீதமுள்ள ₹25,000 தொகுதிப் பணிகளுக்காக தனிச் செயலாளரை நியமிக்க வழங்கப் படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்