இமாச்சலப் பிரதேசம் மற்றும் லடாக் இடையே 5,578 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள பரங் லா கணவாயைக் கடக்கும் வகையில், 28 பெண் என்.சி.சி (தேசிய மாணவர் படை உறுப்பினர்கள்) பங்கேற்கும் 250 கி.மீ தொலைவு கொண்ட 'அபராஜிதா - பரங் லா 2026' மலையேற்றப் பயணத்தை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார்.
பரங் லா கணவாய் என்பது டிரான்ஸ்-இமயமலைப் பிராந்தியத்தில் அமைந்துள்ள ஒரு அதி உயரக் கணவாயாகும்; இது இமாச்சலப் பிரதேசம் மற்றும் லடாக்கை இணைக்கும் முக்கியப் புவியியல் அம்சமாகும்.
துபாயைச் சேர்ந்த 16 வயதான லட்சுமணன் மெய்யப்பன், 16 ஆண்டுகள் 141 நாட்களில் உலகின் மிகவும் இளைய வயது ஆண் பட்டயக் கணக்காளர் என்ற கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளார்.
போட்டித் தேர்வுகளுக்குத் தயாரிக்கும் மாணவர்களுக்காக ₹20 லட்சம் செலவில் 'வெற்றிப் பாதை' செயலியை தமிழ்நாடு அரசு உருவாக்கவுள்ளது.
இச்செயலி பணியாளர் தேர்வாணையம் (SSC), ரயில்வே தேர்வு வாரியம் (RRB), வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம் (IBPS) மற்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆகியவை நடத்தும் தேர்வுகளை உள்ளடக்கும்.
தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு (MLAs) அதிகாரப்பூர்வ வாகனங்கள் மற்றும் எரிபொருள், ஓட்டுநர் மற்றும் வாகனச் செலவுகளுக்காக ₹75,000 உட்பட மாதம் ₹1 லட்சம் படி வழங்கப்படும் என அறிவித்து உள்ளார்.
மீதமுள்ள ₹25,000 தொகுதிப் பணிகளுக்காக தனிச் செயலாளரை நியமிக்க வழங்கப் படும்.