TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 23 , 2026 5 hrs 0 min 45 0
  • இந்திய அறிவியலாளர்கள் RK-251 என்ற ஸ்மார்ட் புற்றுநோய் மருந்தை உருவாக்கி உள்ளனர் என்பதோடு இது புற்றுநோய் செல்களுக்குள் நேரடியாகச் செயல்படுவதால் ஆரோக்கியமான செல்களுக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைக்க உதவுகிறது.
    • மேம்பட்ட அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வு நிறுவனம் (IASST) மற்றும் கவுகாத்தி இந்திய தொழில்நுட்பக் கழகம் ஆகியவற்றின் அறிவியலாளர்களால் உருவாக்கப் பட்ட இந்த மருந்தானது, புற்றுநோய் செல்களில் உள்ள அதிக எதிர் வினை ஆக்ஸிஜன் இனங்களின் (ROS) அளவுகளால் செயல்படுத்தப்பட்டு, NBDHEX என்ற புற்றுநோய் எதிர்ப்புச் சேர்மத்தை வெளியிடுகிறது.
  • சீனாவின் தனியார் விண்வெளி நிறுவனமான லேண்ட்ஸ்பேஸ் (LandSpace) தனது ஜூக்-3 (Zhuque-3) சுற்றுப்பாதை ராக்கெட்டின் முதல் கட்டத்தை வெற்றிகரமாக மீட்டெடுத்து ள்ளது.
  • அடுத்த ஐக்கிய நாடுகள் சபையின் (UN) பொதுச் செயலாளருக்கான வேட்பாளராக ஈக்வடார் நாட்டு தூதர் இவோன் பாக்கியை (Ivonne Baki) டோங்கா (Tonga) நாடு பரிந்துரைத்துள்ளது.
  • புகைப்படக் கலைஞர்களையும், முக்கிய தருணங்களைப் பாதுகாப்பதில் புகைப்படக் கலையின் பங்கையும் அங்கீகரிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 19 அன்று உலக புகைப்பட தினம் அனுசரிக்கப்படுகிறது.
    • 2026 ஆம் ஆண்டிற்கான இதன் கருத்துரு HOME என்பதாகும்.
  • பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களை கௌரவிக்கவும், நினைவுகூரவும், அஞ்சலி செலுத்தவும் மற்றும் அவர்களது மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரங்களை மேம்படுத்தவும் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 21 அன்று பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களை நினைவு கூரும் மற்றும் அஞ்சலி செலுத்தும் சர்வதேச விழிப்புணர்வு தினம் அனுசரிக்கப் படுகிறது.
    • 2026 ஆம் ஆண்டிற்கான இதன் கருத்துரு Healing through Memory என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்