TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 3 , 2026 4 days 67 0
  • அமெரிக்கா, இந்தோனேசியா மற்றும் படைகளை வழங்கும் பிற 13 நாடுகள் பங்கேற்கும் கூட்டு ராணுவப் பயிற்சியான சூப்பர் கருடா ஷீல்ட் 2026 இந்தோனேசியாவில் தொடங்கியது.
  • ஆப்பிள் நிறுவனம் 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 அன்று தலைமை மாற்றத்தை அறிவித்ததுள்ள நிலையில் இதன்படி 2011 ஆம் ஆண்டு முதல் தலைமை நிர்வாக அதிகாரியாக (CEO) பணியாற்றிய டிம் குக் செயல் தலைவராகவும், ஜான் டெர்னஸ் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாகவும் பொறுப்பேற்கின்றனர்.
  • கர்நாடகாவின் சிக்கமகளூரு மாவட்டத்தில் உள்ள குதுரேமுக் மலையேற்றப் பாதைகளில் நீலக்குறிஞ்சியை ஒத்த அரிய நீல-ஊதா நிற மலர்கள் பூத்துள்ளன, நீலக்குறிஞ்சி (ஸ்ட்ரோபிலாந்தஸ் குந்தியானா) என்பது மேற்குத் தொடர்ச்சி மலைகளில் காணப்படும் ஒரு பூக்கும் தாவரமாகும்.
    • இது பொதுவாக 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கூட்டமாகப் பூக்கும் தன்மைக்கு பெயர் பெற்றது.
  • இந்தியக் கடற்படையானது உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட இரண்டாவது நிஸ்டார் வகுப்பு மூழ்குதல் ஆதரவுக் கப்பலான (DSV) 'நிபுண்' கப்பலை மும்பை கடற்படைத் தளத்தில் சேவையில் இணைத்தது.
  • இந்தியாவின் முதல் பசுமை உலை வளாகம் (Green Forge Complex) பஞ்சாபின் மொஹாலியில் உள்ள உயிரித் தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு சபை–தேசிய வேளாண் உணவு உயிரித் தொழில்நுட்ப நிறுவனத்தில் (BRIC-NABI) திறந்து வைக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்