இந்திய விமானப்படையின் மருத்துவப் பிரிவு அல்லாத கிளையிலிருந்து ஏர் வைஸ் மார்ஷல் /வான்படை துணைத் தளபதி பதவியை அடைந்த முதல் பெண் அதிகாரியாக சக்தி சர்மா மாறியுள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் உள்ள சிவாலிக் மலைகளில் லியோசெலஸ் கிராசிலிபால்பஸ் என்ற புதிய தேள் இனத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர்.
இது ஹார்முரிடே குடும்பத்தைச் சேர்ந்தது, மேலும் இது கடல் மட்டத்திலிருந்து 1,655 மீட்டர் உயரத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
நாகாலாந்தின் மெட்ஸிஃபேமா பகுதியில் டெட்ராகோனுலா நாகாலாந்தென்சிஸ் என்ற புதிய வகை கொடுக்கில்லா தேனீயை அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இது முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டு நாகாலாந்தை கௌரவிக்கும் விதமாக இந்த இனத்திற்கு நாகாலாந்தென்சிஸ் என்று பெயரிடப்பட்டது, இதன் மூலம் இந்தியாவில் அறியப்பட்ட கொடுக்கில்லா தேனீ இனங்களின் மொத்த எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.
குர்கானின் சந்து கிராமத்தில் அரிய வகை கூரிய வால் உள்ளான் (கலிட்ரிஸ் அக்குமினாட்டா) பறவை சமீபத்தில் கண்டறியப்பட்டது.
பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு சங்கத்தின் (IUCN) செந்நிறப் பட்டியலில் இதன் நிலை எளிதில் பாதிக்கப்படக்கூடிய இனம் (Vulnerable) என்பதாகும்.