TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 6 , 2026 23 hrs 0 min 31 0
  • தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் (TANSIM) தலைவராக சிங்கை ஜி. ராமச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • தமிழ்நாடு அரசு 1865 ஆம் ஆண்டு முதல் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க சொத்து ஆவணங்கள் மற்றும் 2018 ஆம் ஆண்டு வரையிலான பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ்களை மின்மயமாக்க உள்ளது.
    • பதிவுத் துறையானது, ஏற்கனவே மின்மயமாக்கப்பட்ட ஆவணங்களை மீண்டும் ஸ்கேன்/வருடல் செய்யாமல், 1865 முதல் 1974 ஆம் ஆண்டு வரையிலான 7.06 கோடி பழைய வில்லங்கச் சான்றிதழ்கள் (EC) / குறியீடு-2 ஆவணங்கள் மற்றும் 5.68 கோடி பிறப்பு, இறப்பு ஆவணங்கள் உட்பட 11.14 கோடி பக்கங்களை ஸ்கேன்/வருடல் செய்ய திட்டமிட்டுள்ளது.
  • வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (APEDA), திரிபுராவிலிருந்து ஆஸ்திரியா மற்றும் நெதர்லாந்துக்கு NPOP சான்றிதழ் பெற்ற 18 மெட்ரிக் டன் பாரம்பரிய அரிசியை ஏற்றுமதி செய்ய வசதி செய்துள்ளது.
  • ஆரோக்கியமான உணவு மற்றும் முறையான ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, இந்தியாவில் 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 முதல் 7 ஆம் தேதி வரை தேசிய ஊட்டச்சத்து வாரம் (NNW) 2026 அனுசரிக்கப்படுகிறது.
    • இந்தியாவில் ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வை பரப்பச் செய்வதற்காக, உணவு மற்றும் ஊட்டச்சத்து வாரியம் மூலம் 1982 ஆம் ஆண்டில் தேசிய ஊட்டச்சத்து வாரம் தொடங்கப்பட்டது.
  • உலகின் மிக உயரமான கட்டடங்களுக்குப் பின்னணியில் உள்ள பொறியியல் மற்றும் கட்டிடக்கலையை சிறப்பிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 3 அன்று உலக வானளாவிய கட்டிட தினம் அனுசரிக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்