TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 9 , 2026 5 days 106 0
  • இத்தாலியில் நடைபெற்ற 2026 ஆம் ஆண்டிற்கான 19வது சர்வதேச புவி அறிவியல் ஒலிம்பியாட் (IESO) போட்டியில் இந்தியா சாதனை அளவாக 9 பதக்கங்களைக் கைப்பற்றியுள்ளது.
    • 39 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்களிடையே இந்திய அணி 4 தங்கம், 3 வெள்ளி மற்றும் 2 வெண்கலப் பதக்கங்களை வென்றது.
  • மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி, தேசிய பேரிடர் மீட்புப் படையின் (NDRF) மாதிரியில் அமைக்கப்பட்ட 200 உறுப்பினர்களைக் கொண்ட சிறப்புப் பேரிடர் மீட்புக் குழுவான ‘அர்ஜுன் வாகினி’ என்ற அமைப்பை 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 அன்று தொடங்கினார்.
  • ஏர் வைஸ் மார்ஷல்/வான்படைத் துணைத் தலைவர் சக்தி சர்மா, இந்திய ஆயுதப் படைகளின் மருத்துவமல்லாத பிரிவில் இருந்து ஏர் வைஸ் மார்ஷல் அல்லது அதற்கு இணையான பதவியை எட்டிய முதல் பெண் அதிகாரி என்ற பெருமையை 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 அன்று பெற்றார்.
    • 1994 ஆம் ஆண்டில் இந்திய விமானப் படையின் கல்விப் பிரிவில் இணைந்த இவர், விமானப் படைத் தலைமையகத்தின் உதவித் தலைவராக (கல்வி) பொறுப்பேற்றார். மேலும் கபூர்தலாவில் உள்ள சைனிக் பள்ளியின் முதல்வராகப் பணியாற்றி, சைனிக் பள்ளியை வழிநடத்திய முதல் பெண் முப்படை அதிகாரியாவார்.
  • இந்தோனேசியாவில் உள்ள அனக் கரக்கடோவா எரிமலை வெடித்ததால், சுமார் 3,000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு 3,40,000-க்கும் மேற்பட்ட பயணிகள் பாதிக்கப் பட்டனர்.
    • "கரக்கடோவாவின் குழந்தை" என்று பொருள்படும் அனக் கரக்கடோவா, ஜாவா மற்றும் சுமத்ராவுக்கு இடையில் உள்ள சுண்டா நீரிச்சந்தியில், ஜகார்த்தாவில் இருந்து சுமார் 150 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது; இது 1883 ஆம் ஆண்டில் கரக்கடோவா எரிமலை வெடித்த பிறகு உருவான கடலடிப் பள்ளத்திலிருந்து எழுந்தது.
  • தன்னார்வத் தொண்டு மற்றும் தொண்டு நடவடிக்கைகளின் மூலம் மற்றவர்களுக்கு உதவ மக்கள், அரசு சாரா நிறுவனங்கள் (NGOs) மற்றும் பிற அமைப்புகளை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5 அன்று சர்வதேச தொண்டு தினம் அனுசரிக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்