நியூயார்க்கில் நடைபெற்ற 2026 ஆம் ஆண்டு USஓபன் டென்னிஸ் தொடரில், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் (Alexander Zverev) மற்றும் கஜகஸ்தானின் எலினா ரைபாகினா (Elena Rybakina) ஆகியோர் முறையே ஆடவர் மற்றும் மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளனர்.
ஸ்வரேவ், அமெரிக்காவின் பென் ஷெல்டனை (Ben Shelton) தோற்கடித்து தனது முதல் US ஓபன் பட்டத்தைக் கைப்பற்றினார்; ரைபாகினா, பெலாரஸின் அரினா சபலென்காவை (Aryna Sabalenka) தோற்கடித்து தனது முதல் US ஓபன் பட்டத்தையும் ஒட்டுமொத்தமாக தனது 3வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தையும் வென்றார்.
சத்தீஸ்கர் மாநிலத்தின் ராய்காட் பகுதியில் 1.85 கி.மீ நீளத்தில் உலகின் மிக நீளமான எஃகு கழிவுச் சாலையை அமைத்து இந்தியா கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது.
மேற்கு வங்காளத்தின் பூர்பா மேதினிபூர் மாவட்டத்தில் உள்ள ஜுன்புட் என்ற இடத்தில் புதிய DRDO ஆயுத மற்றும் எறிகணை சோதனை மையம் அமைக்கப் பரிந்துரைக்கப் பட்டுள்ளது.
சாந்திப்பூர் சோதனை மையம் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் முன்மொழியப் பட்டுள்ள சோதனை மையத்திற்குப் பிறகு, ஜுன்புட் மையம் DRDO-வின் 3வது முக்கிய சோதனை மையமாக உருவெடுக்கும்.
அவசரகாலங்களில் உயிர்களைக் காப்பதில் முதலுதவியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை உலக முதலுதவி தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி 2026 ஆம் ஆண்டில் செப்டம்பர் 12 அன்று இத்தினம் அனுசரிக்கப்பட்டது.
மின்சார வாகனங்களின் பயன்பாடு மற்றும் நிலையான போக்குவரத்தை ஊக்குவிப்பதற்காக, ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 9 அன்று உலக மின்சார வாகன தினம் அனுசரிக்கப்படுகிறது.
2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு “Switching Electric: Driving Down the Cost of Motoring” என்பதாகும்.