TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 16 , 2026 5 days 95 0
  • கூகுள் டீப்மைண்ட் (Google DeepMind) மனித மரபணுவில் ஏற்படும் ஒற்றை மரபணு மாற்றங்களின் விளைவுகளைக் கணிக்கும் தரவுதளமான ஆல்ஃபாஜீனோம் அட்லஸை (AlphaGenome Atlas) அறிமுகப்படுத்தியது.
    • இது சாத்தியமான 9 பில்லியன் ஒற்றை-நியூக்ளியோடைடு மாறுபாடுகளின் ஒழுங்குமுறை விளைவுகளைக் கணிக்க ஆல்ஃபாஜீனோம் செயற்கை நுண்ணறிவு (AI) மாதிரியைப் பயன்படுத்துகிறது என்பதோடு இதன் மூலம் 1-பெட்டாபைட் தரவுத் தொகுப்பை உருவாக்குகிறது.
  • இந்திய விமானப்படையானது (IAF) கண்காணிப்பு, உளவு பார்த்தல், தன்னாட்சி செயல் பாடுகள், ஸ்வார்ம் (swarm) தொழில்நுட்பங்கள், மின்னணு போர்முறை மற்றும் ஆளில்லா விமான எதிர்ப்பு அமைப்புகள் (CUAS) ஆகியவற்றைச் சோதிப்பதற்காக தனது முதல் ட்ரோனத்தான்-2026-ஐ (Dronathon-2026) ராஜஸ்தானின் ஜெய்சல்மரில் உள்ள பொக்ரான் துப்பாக்கி பயிற்சி தளத்தில் தொடங்கியது.  
  • ஒடிசாவில் உள்ள தலாபிரா II மற்றும் III நிலக்கரி சுரங்கமானது 2025–26 ஆம் நிதி ஆண்டில் 19.14 மில்லியன் டன்கள் (MT) என்ற தனது இதுவரை இல்லாத அதிகபட்ச ஆண்டு நிலக்கரி உற்பத்தியைப் பதிவு செய்துள்ளது.
    • இந்த திறந்தவெளிச் சுரங்கம் ஒடிசாவின் சம்பல்பூர் மற்றும் ஜார்சுகுடா மாவட்டங்களில் அமைந்துள்ளது என்பதுடன் மேலும் இது NLC இந்தியா லிமிடெட் நிறுவனத்தால் இயக்கப்படுகிறது.
  • இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) பாதுகாப்பற்ற பூச்சிக் கொல்லிகள் காரணமாக M/s நீலகிரி ஆயில் & அலைடு இண்டஸ்ட்ரீஸ் தயாரித்த ஷாலிமார்ஸ் செஃப்-கொத்தமல்லித் தூளையும், பாதுகாப்பற்ற காட்மியம் அளவுகள் காரணமாக M/s அக்வாக்ரி ப்ராசசிங் பிரைவேட் லிமிடெட் தயாரித்த கராஜீனன் (Carrageenan) பொருளையும் திரும்பப் பெற உத்தரவிட்டுள்ளது.
    • 2017 ஆம் ஆண்டு உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலை (உணவு திரும்பப் பெறுதல் நடைமுறை) விதிமுறைகளின் படி, 2006 ஆம் ஆண்டு உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தின் கீழ் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்