TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 19 , 2026 2 days 34 0
  • இந்திய வாகன ஆராய்ச்சிச் சங்கத்தின் (ARAI) புனேவின் தக்வேயில் உள்ள வசதி னது உயர் அழுத்த சிலிண்டர்/உருளைக் கொள்கலன் பரிசோதனைக்காக வேண்டி சோதனை மற்றும் அளவுத் திருத்த ஆய்வகங்களுக்கான தேசிய அங்கீகார வாரியத்தின் (NABL) அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.
    • ARAI ஆனது 1966 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது, அதே நேரத்தில் NABL என்பது சோதனை மற்றும் அளவுத் திருத்த ஆய்வகங்களுக்கான இந்தியாவின் தேசிய அங்கீகார அமைப்பாகும்.
  • ஈரானிய அரசு தரப்புடன் தொடர்புடையதும், வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராமில் ஸ்பியர்-ஃபிஷிங் இணையவழி மோசடி முறை குறித்த பிரச்சாரங்கள் மூலம் பயன்படுத்தப் படுவதுமான சோசன் பிரிக் (CHOSEN BRICK) என்ற உளவு மென்பொருள் குறித்து இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் நெதர்லாந்து ஒரு கூட்டு ஆலோசனையை வெளியிட்டன.
    • இந்த ஸ்பைவேரால்/உளவுமென்பொருளால் மின்னஞ்சல்கள், செய்திகள் மற்றும் தொடர்புப் பட்டியல்களைத் திருடவும், திரைகளைப் படம் பிடிக்கவும், சமூக ஊடகக் கணக்குகளை அணுகவும் மற்றும் சாதனத்தின் மைக்ரோ ஃபோனை / மின்சார ஒலிபெருக்கியைப் பயன்படுத்தவும் முடியும்.
  • ஓபியோபோகன் ஜபோனிகஸ் (Ophiopogon japonicus) என்பது இந்தியாவில் முதல் முறை ஆக அருணாச்சலப் பிரதேசத்தின் மேற்கு காமெங் மாவட்டத்தில் பதிவு செய்யப் பட்டு உள்ளது; இது பொதுவாக குள்ள லில்லிடர்ஃப் அல்லது மாண்டோ புல் என்று அழைக்கப் படுகிறது மற்றும் இது ஒரு பசுமையான வற்றாத தாவரமாகும்.
    • ஓபியோபோகோனிஸ் ரேடிக்ஸ் (Ophiopogonis Radix - மைடாங்) என்று அழைக்கப் படும் அதன் கிழங்கு வேர்கள் பாரம்பரிய சீன மருத்துவத்தில் பயன்படுத்தப் படுகின்றன.
  • ஸ்கிசோபைகோப்சிஸ் வாடெல்லி (Schizopygopsis waddellii) இந்தியாவில் முதல் முறையாக அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங்கில் உள்ள பாங்காங் டெங் த்சோ ஏரியில் பதிவு செய்யப் பட்டுள்ளது.
    • இது 'ஸ்னோட்ரவுட்'/பனிக்கெண்டை (snowtrout) வகையைச் சேர்ந்த, சைப்ரினிடி (Cyprinidae) குடும்பத்தைச் சார்ந்த, குளிர்ந்த சூழலுக்கு ஏற்ற ஒரு நன்னீர் மீன் ஆகும்.
  • MG ஹெக்டர் டோமாஹாக் (MG Hector Tomahawk) என்பது இந்தியாவின் முதல் பிரதான பிளக்-இன் கலப்பின மின்சார வாகனம் (PHEV) SUV (விளையாட்டு மற்றும் பயன்பாட்டு வாகனம்) ஆகும்.
    • PHEV என்பது பெட்ரோல் எஞ்சின் மற்றும் மின்சார மோட்டாரை வெளிப்புறமாக மின்னேற்றம் செய்யக் கூடிய மின்கலத்துடன் ஒருங்கிணைக்கிறது, இது வழக்கமான கலப்பினங்களை விட நீண்ட தூரத்திற்கு மின்சார சக்தியில் மட்டுமே இயங்க அனுமதிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்