TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 21 , 2026 15 hrs 0 min 26 0
  • குஜராத்தின் கெவாடியாவில் நடைபெறும் தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் மூத்த கன்னட நடிகர் ஆனந்த் நாக் அவர்களுக்கு 2024 ஆம் ஆண்டிற்கான தாதா சாகெப் பால்கே விருது வழங்கப்படவுள்ளது.
  • பாராளுமன்ற ஜனநாயகம், சட்டமியற்றும் நடைமுறைகள் மற்றும் நாடாளுமன்றங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு குறித்து விவாதிப்பதற்காக 69வது காமன்வெல்த் நாடாளுமன்ற மாநாடு (CPC), காமன்வெல்த் நாடாளுமன்றக் கூட்டமைப்பின் (CPA) கீழ் தென்னாப்பிரிக்காவின் கேப் டவுனில் நடைபெறுகிறது.
    • இதன் கருத்துரு "மாறிவரும் உலக வரிசையில் சர்வதேச சட்டம் மற்றும் நாடாளுமன்ற ஜனநாயகத்தை வலுப்படுத்துதல்: காமன்வெல்த் தலைமை" என்பதாகும்.
  • புது தில்லியில் 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 அன்று நடைபெற்ற இந்திய உலக விவகாரங்கள் குழுவின் (ICWA) தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனத்தின் 25 வது ஆண்டு விழாவில் குடியரசு துணைத் தலைவர் சி. பி. ராதாகிருஷ்ணன் உரையாற்றினார்.
    • சர்வதேச விவகாரங்கள் மற்றும் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகள் குறித்த ஆய்வு மற்றும் புரிதலை மேம்படுத்துவதற்காக ICWA நிறுவப்பட்டது.
  • ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் என். சந்திரபாபு நாயுடு வெலிகொண்டா நீர்ப்பாசனத் திட்டத்தின் முதல் கட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
    • இத்திட்டம் புவியீர்ப்பு விசையின் மூலம் ஸ்ரீசைலம் நீர்த்தேக்கத்தில் இருந்து நல்லமலா சாகர் நீர்த்தேக்கத்திற்கு கிருஷ்ணா நதி நீரைத் திருப்புகிறது.
  • வட கடலில் உள்ள பழைய எண்ணெய் தளத்திற்கு அருகே கடலுக்கு அடியில் கார்பன் டை ஆக்சைடை (CO2) சேமிக்கும் கிரீன்சாண்ட் (Greensand) திட்டமான ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) முதல் முழு அளவிலான கார்பன் டை ஆக்சைடு சேமிப்பு வசதியின் செயல்பாடுகளை டென்மார்க் தொடங்கியுள்ளது.
  • மழைப்பொழிவு மற்றும் கடுமையான வானிலையின் இருப்பிடம், இயக்கம் மற்றும் தீவிரத்தை கண்காணிக்க ரேடியோ அலைகளைப் பயன்படுத்தும் இந்தியாவின் 51 வது டாப்ளர் வானிலை ரேடார் (DWR) ஒடிசாவின் சம்பல்பூரில் திறக்கப்பட்டது.
    • ஒடிசாவில் தற்போது சம்பல்பூர், கோபால்பூர் மற்றும் பாரதீப் ஆகிய இடங்களில் மூன்று டாப்ளர் வானிலை ரேடார்கள் உள்ளன.
  • உலகளாவிய தெற்கில் நிலையான மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளை (STI) மேம்படுத்துவதற்காக, ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 16 அன்று தெற்கிற்கான சர்வதேச அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.
    • 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 15-16 தேதிகளில் கியூபாவின் ஹவானாவில் நடைபெற்ற அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு மாநாட்டில் ஹவானா பிரகடனத்தின் மூலம் G77 மற்றும் சீனா ஆகிய நாடுகளால் இத்தினம் முன்மொழியப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்