TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 23 , 2026 9 days 116 0
  • ஒடிசாவின் கட்டாக்கில் இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா 2026 ஆம் ஆண்டிற்கான கலிங்க ரத்னா விருதைப் பெற்றார்.
  • மேக்யுங் மீடியா குழுமத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட 27வது உலக அறிவுசார் மன்றம் தென் கொரியாவின் சியோலில் நடைபெற்றது.
    • "The Promethean Moment: Architecting the Co-Intelligence Order" என்ற கருத்துருவுடன், இது செயற்கை நுண்ணறிவு (AI), உலகளாவிய பொருளாதார மாற்றம், தேசிய பாதுகாப்பு, குவாண்டம் கணினி மற்றும் இணையப் பாதுகாப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தியது.
  • ஜப்பானின் ஐச்சியில் உள்ள டொயோட்டா நகரில் நடைபெற்ற 2026 ஆம் ஆண்டிற்கான ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இளவேனில் வாலறிவன் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
  • ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் இந்தியா மற்றும் இலங்கை இடையேயான 13வது இருதரப்பு கடற்படைப் பயிற்சியான SLINEX-26 தொடங்கியுள்ளது.
  • ராஜஸ்தானின் ஜோத்பூர் விமானப்படை நிலையத்தில் இந்திய விமானப்படை (IAF) மற்றும் ஜப்பான் விமானத் தற்காப்புப் படை (JASDF) ஆகியவை வீர் கார்டியன்-2026 எனும் பயிற்சியை மேற்கொள்கின்றன.
  • லடாக்கின் லே மாவட்டத்தில் 10,600 அடி (3,265 மீட்டர்) உயரத்தில் உள்ள சோக்லாம்சார் மற்றும் ஸ்டக்னாவில் இரட்டை மலர் தோட்டங்கள் திறக்கப்பட்டன.
  • 1980 ஆம் ஆண்டின் பாஸ்போர்ட்/கடவுச்சீட்டு விதிகளில் திருத்தம் செய்து, 2026 ஆம் ஆண்டிற்கான பாஸ்போர்ட்/கடவுச்சீட்டு (திருத்த) விதிகளை வெளியுறவு அமைச்சகம் (MEA) அறிவித்தது.
    • 15 வயதுக்குட்பட்ட குழந்தைக்கான சாதாரண பாஸ்போர்ட்/கடவுச்சீட்டு ஐந்து ஆண்டுகளுக்கு அல்லது குழந்தைக்கு 18 வயது ஆகும் வரை, இதில் எது முந்தையதோ அதுவரை செல்லுபடியாகும்.
  • கடல் மாசடைதல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், கடற்கரைகள், ஆறுகள் மற்றும் பிற நீர்வழிகளை தூய்மைப்படுத்த மக்களை ஊக்குவிக்கவும் செப்டம்பர் மாதத்தின் மூன்றாவது சனிக்கிழமையான 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் 19 அன்று சர்வதேச கடற்கரை தூய்மை தினம் அனுசரிக்கப்பட்டது.
    • 2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு "Clean Seas for Resilient Communities" என்பதாகும்.
  • உலக நோயாளி பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு தினம் ஆண்டுதோறும் செப்டம்பர் 17 அன்று அனுசரிக்கப்படுகிறது, 2026 ஆம் ஆண்டில் இதய நோய்கள், புற்றுநோய், நீரிழிவு மற்றும் நாள்பட்ட சுவாச நோய்கள் போன்ற தொற்றா நோய்களுக்கான (NCDs) பாதுகாப்பான கவனிப்பில் இது கவனம் செலுத்துகிறது.
    • 2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு "Safe care for life!" என்பதாகும்.
  • நீரின் தரத்தை கண்காணிப்பது மற்றும் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த உலக நீர் கண்காணிப்பு தினம் ஆண்டுதோறும் செப்டம்பர் 18 அன்று அனுசரிக்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்