TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 26 , 2026 6 days 96 0
  • தேஜா ரியோ இயக்கிய நாகாலாந்தை மையமாகக் கொண்ட 'ஆங்' (Angh) திரைப்படம் 2026 ஆம் ஆண்டு டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் (TIFF) பிளாட்ஃபார்ம் விருதை வென்றது.
  • ஜப்பானில் நடைபெற்ற 2026 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் 321 வது முறையாக சர்வதேச அளவில் பங்கேற்றதன் மூலம், இந்தியாவின் அதிக போட்டிகளில் விளையாடிய மகளிர் ஹாக்கி வீராங்கனை என்ற பெருமையை சவிதா புனியா பெற்றார்.
  • ஜப்பானின் ஐச்சி-நகோயாவில் நடைபெற்ற 2026 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கலப்பு தற்காப்புக் கலைகளில் (MMA) சுசிகா தரியால் வெண்கலப் பதக்கம் வென்று, கலப்பு தற்காப்புக் கலைகளில் இந்தியாவின் முதல் ஆசிய விளையாட்டுப் பதக்கத்தை வென்றவர் என்ற பெருமையைப் பெற்றார்.
  • இந்தியா மற்றும் மங்கோலியா இடையேயான வருடாந்திர இருதரப்பு இராணுவப் பயிற்சியான நோமாடிக் எலிஃபண்ட் (NOMADIC ELEPHANT) பயிற்சியின் 18வது பதிப்பு உத்தரகண்ட் மாநிலத்தின் பித்தோராகரில் தொடங்கியது.
  • சோவா-ரிக்பா மருந்தகங்கள் மற்றும் சூத்திரங்களை மேம்படுத்தவும், சோவா-ரிக்பா மருந்துகளின் தரநிலைகள், ஒழுங்குமுறை தேவைகள் மற்றும் தர உத்தரவாதத்தை ஆதரிக்கவும் சோவா-ரிக்பா பணிக்குழுவின் முதல் கூட்டம் உத்தர பிரதேசத்தின் காசியாபாத்தில் நடைபெற்றது.
  • அருணாச்சலப் பிரதேசத்தின் கெய் பன்யோர் மாவட்டத்தில் 'பெகோனியா நீலமோரம்' (Begonia neelamorum) என்ற புதிய பூக்கும் தாவர இனம் கண்டறியப் பட்டு உள்ளது.
    • இந்த இனத்திற்கு நிஷி சமூகத்தின் நீலம் குலத்தின் பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இது உள்நாட்டில் "கோபீர்ஹோபு பாப்ரை" என்று அழைக்கப்படுகிறது.
  • சர்வதேச கப்பல் போக்குவரத்து மற்றும் கடல்சார் பாதுகாப்பு, பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதற்காக ஆண்டுதோறும் செப்டம்பர் 24 அன்று உலக கடல்சார் தினம் அனுசரிக்கப்படுகிறது.
    • 2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு “From Policy to Practice: Powering Maritime Excellence” என்பதாகும்.

Anitha A September 26, 2026

good

Reply

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்