TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 30 , 2026 12 hrs 0 min 16 0
  • இந்தியக் கடலோரக் காவல்படையின் 'சௌனக்' கப்பல் சென்னையிலிருந்து ஆஸ்திரேலியாவின் பெர்த் நகருக்குப் பயணம் மேற்கொண்டதன் மூலம், 2026 ஆம் ஆண்டு குவாட் (QUAD) கடற்படைப் பார்வையாளர் பணிக்கு இந்தியா தலைமையேற்றது.
    • குவாட் அமைப்பானது இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளை உள்ளடக்கியதாகும்.
  • அமெரிக்க உச்ச நீதிமன்றம், பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் குடியுரிமை நிலையைச் சரிபார்க்க ட்ரம்ப் நிர்வாகத்தின் விரிவாக்கப்பட்ட உரிமைகளுக்கான முறையான வெளிநாட்டவர் சரிபார்ப்பு (SAVE) அமைப்பைப் பயன்படுத்த அனுமதித்து உள்ளது.
    • மாற்றியமைக்கப்பட்ட 'சேவ்' (SAVE) அமைப்பானது சமூக பாதுகாப்பு எண்கள் மற்றும் கூட்டாட்சி ஆவணங்களைப் பயன்படுத்துவதோடு, மொத்தமாக வாக்காளர் நிலையைச் சரிபார்க்க மாகாணங்களை அனுமதிக்கிறது.
  • செயற்கை நுண்ணறிவு (AI) சம்பவங்களுக்கான தகவல் தொடர்பு வழியையும், அமெரிக்க-சீன மீ-நுண்ணறிவு குறித்த உரையாடலையும் (Super Intelligence Dialogue) நிறுவ அமெரிக்காவும் சீனாவும் வாஷிங்டன் டி.சி.யில் ஒப்புக்கொண்டன.
    • இந்த செயற்கை நுண்ணறிவு சம்பவத் தொடர்பு வழியானது, செயற்கை நுண்ணறிவு தொடர்பான பாதுகாப்பு அல்லது அச்சுறுத்தல் சம்பவங்களின் போது இரு நாடுகளுக்கும் இடையே நேரடித் தொடர்பை வழங்கும்.
  • நாடுகளை இணைப்பதிலும், உரையாடலை ஊக்குவிப்பதிலும் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்துவதிலும் மொழி வல்லுநர்களின் பங்கை அங்கீகரிக்கும் வகையில் ஆண்டுதோறும் செப்டம்பர் 30 ஆம் தேதி சர்வதேச மொழிபெயர்ப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.
    • 2026 ஆம் ஆண்டிற்கான இதன் கருத்துரு “Linguistic Diversity and Language Rights” என்பதாகும்.
  • கலாச்சாரங்களை இணைப்பதிலும், வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதிலும் மற்றும் அதன் பொருளாதார, சமூக நன்மைகளை எடுத்துரைப்பதிலும் சுற்றுலாவின் முக்கியத்துவத்தை மேம்படுத்த ஆண்டுதோறும் செப்டம்பர் 27 ஆம் தேதி உலக சுற்றுலா தினம் அனுசரிக்கப்படுகிறது.
    • 2026 ஆம் ஆண்டிற்கான இதன் கருத்துரு “Digital Agenda and Artificial Intelligence to Redesign Tourism” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்