2026 ஆம் ஆண்டிற்கான சாஸ்த்ரா-ராமானுஜன் விருது ஸ்டான்போர்டு பல்கலைக் கழக கணிதவியலாளர் சாரா பெலூஸுக்கு வழங்கப்பட்டுள்ளது; 32 வயது மற்றும் அதற்குக் குறைவான வயதுடைய கணிதவியலாளர்களுக்காக சாஸ்த்ரா (சண்முகா கலை, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அகாடமி) நிறுவனத்தால் இந்த விருது 2005 ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்டது.
கூகுள் நிறுவனத்தின் சன்கேட்சர் திட்டம் (Project Suncatcher) செயற்கை நுண்ணறிவுக் (AI) கணிப்பீட்டை விண்வெளியில் சோதிக்க உள்ளது, இதன் முதல் மாதிரி செயற்கைக் கோள் 2026 ஆம் ஆண்டு அக்டோபர் 1 அன்று விண்ணில் ஏவ திட்டமிடப் பட்டுள்ளது.
ஊரகச் சுற்றுலாவை மேம்படுத்தவும் உள்ளூர் விவசாயிகளுக்கு ஆதரவளிக்கவும் மிசோரம் மாநிலம் தனது முதல் 'பிளக் அண்ட் பே' (Pluck & Pay) திருவிழாவை காவ்ஸால் மாவட்டத்தின் டுவால்டே மற்றும் சாங்ட்லாய் கிராமங்களில் தொடங்கியது.
2032 ஆம் ஆண்டில் முதன்முறையாக UCI சாலை மிதிவண்டி உலக சாம்பியன்ஷிப் போட்டிகளை இந்தியாவில் நடத்த மகாராஷ்டிராவின் புனே நகரம் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.
சென்னையின் ஒரகடத்தில் உள்ள உலகளாவிய வாகன ஆராய்ச்சி மையம் (GARC), PM E-DRIVE (புதுமையான வாகன மேம்பாட்டில் பிரதமரின் மின்சார வாகனப் புரட்சி) திட்டத்தின் கீழ் ₹221.13 கோடி மதிப்பீட்டில் தனது வாகனப் பரிசோதனை வசதிகளை மேம்படுத்தி வருகிறது.
GARC ஆனது கனரக தொழில்துறை அமைச்சகத்தின் (MHI) தேசிய வாகன வாரியத்தின் (NAB) கீழ் செயல்படுகிறது மற்றும் இது மத்திய மோட்டார் வாகன விதிகளின் (CMVR) விதி 126-இன் கீழ் அங்கீகரிக்கப்பட்ட வாகனப் பரிசோதனை முகமையாகும்.
1984 ஆம் ஆண்டில் பி.டி. உஷா படைத்த 55.42 வினாடிகள் என்ற 42 ஆண்டுகால சாதனையை முறியடித்து, பெண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்டத்தில் வித்யா ராம்ராஜ் 54.75 வினாடிகளில் கடந்து புதிய தேசிய சாதனையைப் படைத்தார், இந்த சாதனையானது 2026 ஆம் ஆண்டிற்கான உலகப் பட்டியலில் 33வது இடத்தைப் பிடித்து உள்ளது.
ஜப்பானின் நகோயாவில் நடைபெற்ற 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான ட்ராப் (trap) துப்பாக்கி சுடுதல் பிரிவில் தனிநபர் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை நீரு தண்டா பெற்றார்.
குஜராத்தின் காண்ட்லாவில் உள்ள தீனதயாள் துறைமுகத்தில் இந்தியாவின் முதல் துறைமுகம் சார்ந்த மின்னணு-மெத்தனால் உற்பத்தி நிலையத்திற்கு அடிக்கல் நாட்டப் பட்டது.