TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 12 , 2026 13 days 161 0
  • லடாக்கின் ந்யோமாவில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மேம்பட்ட அதிக உயர பாராசூட்டின் (AHAP) முதல் நேரடி சோதனையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) மேற்கொண்டது.
  • ஆந்திரப் பிரதேசத்தின் அன்னமய்யா மாவட்டம் மதனப்பள்ளியில் ₹1 லட்சம் கோடி மதிப்பிலான உலகளாவிய தோட்டக்கலை மையத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
    • ராயலசீமா ரைசிங் என்றும் அழைக்கப்படும் இத்திட்டம் 10 மாவட்டங்களில் 303 மண்டலங்கள் மற்றும் 5,869 கிராமங்களில் உள்ள 201 தொகுப்புகளை உள்ளடக்கும்.
  • இந்திய விமானப்படையின் (IAF) 29ஆவது தளபதியாக ஏர் மார்ஷல் அசுதோஷ் தீட்சித் நியமிக்கப்பட்டுள்ளார், மேலும் அவர் விமானப்படைத் தலைமைத் தளபதி அமர் பிரீத் சிங்கிற்குப் பிறகு 2026 ஆம் ஆண்டு அக்டோபர் 31 அன்று பொறுப்பேற்கவுள்ளார்.
  • தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற 2026 ஆம் ஆண்டு சசோல் சோலார் சவாலில் இந்திய தொழில்நுட்பக் கழகம் மெட்ராஸ் அணியான அக்னிரத் தனது சூரிய சக்தியில் இயங்கும் வாகனமான ஆக்னேயாவுடன் மூன்றாம் இடத்தைப் பிடித்தது, இதன் மூலம் இப்போட்டியில் பங்கேற்று கோப்பையை வென்ற முதல் இந்திய அணி என்ற பெருமையைப் பெற்றது.
  • அகமதாபாத்தை மையமாகக் கொண்ட விண்வெளி தொழில்நுட்ப தொடக்க நிறுவனமான சாட்லியோ லேப்ஸ், இந்தியாவின் முதல் வணிகரீதியான தனியார் வெப்பப் படமெடுக்கும் கருவியான TAPAS-1-ஐ (பகுப்பாய்வு மற்றும் தீர்வுகளுக்கான வெப்ப அணுகல் தளம்-1) ஸ்பேஸ்எக்ஸின் பால்கன் 9 ஏவுகலத்தில் டிரான்ஸ்போர்ட்டர்-18 ரைட்ஷேர் திட்டத்தின் கீழ் விண்ணில் செலுத்தியது.
    • TAPAS-1 என்பது வெப்ப அகச்சிவப்பு கதிர்வீச்சைப் பயன்படுத்தி பூமியின் மேற்பரப்பு வெப்பநிலையை அளவிட வடிவமைக்கப்பட்ட, 1.5 கிலோ எடையுள்ள ஒரு மட்டுநிலை கியூப்சாட் (CubeSat) பேலோடு ஆகும்.
  • அதிகரித்து வரும் உலகளாவிய எரிசக்தி விலையைத் தணிக்கும் வகையில் சர்வதேச எரிசக்தி முகமையின் (IEA) மூலம் 100 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் மற்றும் டீசலை ஒருங்கிணைந்து வெளியிடுவதாக G7 கூட்டமைப்பு அறிவித்தது.
    • G7 கூட்டமைப்பில் கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், ஐக்கிய பேரரசு மற்றும் அமெரிக்கா ஆகியவை அடங்கும்; இதில் ஐரோப்பிய ஒன்றியமும் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறது.
  • மனநலக் கொள்கைகள், சேவைகள் மற்றும் முடிவுகளை உருவாக்குவதில் மனநல பாதிப்புகளை அனுபவித்த மக்களை ஈடுபடுத்தும் நோக்கத்துடன் 2026 ஆம் ஆண்டு அக்டோபர் 10 அன்று உலக மனநல தினம் அனுசரிக்கப்பட்டது.
    • 2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு “Lived Experiences Heard: Real Voices, Real Change” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்