உத்தரப் பிரதேச அமைச்சரவையானது, ஜெவாரில் உள்ள நொய்டா சர்வதேச விமான நிலையத்தின் பெயரை நரேந்திர மோடி சர்வதேச விமான நிலையம் என பெயர் மாற்றம் செய்வதற்கான முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் பர்ஹாமில் நடைபெற்ற 2026 ஆம் ஆண்டு உலக பவுல்ஸ் சாம்பியன் ஆஃப் சாம்பியன்ஸ் போட்டியில் அசாமைச் சேர்ந்த புத்துல் சோனோவால் இந்தியாவின் முதல் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.
இந்தியக் கடற்படை மற்றும் இங்கிலாந்தின் ராயல் கடற்படை ஆகியவற்றுக்கு இடையேயான வருடாந்திர இருதரப்பு கடல்சார் பயிற்சியான கொங்கன் பயிற்சி 2026 ஆனது ஐக்கிய பேரரசின் பிளைமவுத் கடற்கரையில் நடைபெற்றது.
இமாச்சலப் பிரதேசத்தின் லஹவுல்-ஸ்பிதியில் உள்ள கீலாங்கில் இந்தியாவின் முதல் உயரமான மலைப்பகுதி சுகாதார ஆராய்ச்சி மையத்திற்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெகத் பிரகாஷ் நட்டா அடிக்கல் நாட்டினார்.
மத்திய உள்துறை அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளைத் தொடர்ந்து, ஜந்தர் மந்தரை போராட்டக் களமாக அறிவித்திருந்ததை டெல்லி காவல்துறை திரும்பப் பெற்றது. மேலும் கிழக்கு டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானம், புராரி மைதானம் மற்றும் CBD மைதானம் ஆகியவற்றை மாற்று இடங்களாக அறிவித்துள்ளது.
உலக சுகாதார நிறுவனமானது செர்வாவாக் தடுப்பூசிக்கு முன்-தகுதி அங்கீகாரத்தை வழங்கியதன் மூலம் இந்த அங்கீகாரத்தைப் பெறும் இந்தியாவிலேயே தயாரிக்கப் பட்ட முதல் குவாட்ரிவலன்ட்/நாற்கூறு மனித பாப்பிலோமா வைரஸ் தடுப்பூசியாக இது மாறியுள்ளது.
மரண தண்டனையை ஒழிப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், உலகளவில் மனித உரிமைகள் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காகவும் ஆண்டுதோறும் அக்டோபர் 10 அன்று மரண தண்டனைக்கு எதிரான உலகளாவிய தினம் அனுசரிக்கப்படுகிறது.
2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு "Stories for Life" என்பதாகும்.