TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 18 , 2026 7 days 122 0
  • எரிசக்தி மற்றும் தூய்மையான காற்று குறித்த ஆராய்ச்சி மையத்தின் (CREA) கூற்றுப் படி, 2026-27 ஆம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில், இந்தியாவின் புதுப்பிக்கத் தக்க மின்சார உற்பத்தி முதல் முறையாக ஒரு காலாண்டில் 100 பில்லியன் யூனிட்டுகளை (BU) தாண்டியுள்ளது.
  • கோயம்புத்தூர் காந்திபுரத்தில் பெரியார் அறிவகம் என்ற நூலகம் மற்றும் அறிவியல் மையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்.
  • டிஜிட்டல் இந்தியா பாஷினி பிரிவும், பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனமும் (IISc) இணைந்து தமிழ்நாட்டில் வாழும் சௌராஷ்டிரா சமூகத்தினர் பேசும் சௌராஷ்டிரா மொழிக்கான உரையிலிருந்து பேச்சுக்கு (text-to-speech) மாறும் மாதிரிகளை உருவாக்கியுள்ளன.
    • சௌராஷ்டிரா என்பது தமிழ்நாட்டில் வாழும் சௌராஷ்டிரா சமூகத்தினரால் முக்கியமாகப் பேசப்படும் ஒரு சிறுபான்மை இந்தோ-ஆரிய மொழியாகும்.
  • கர்நாடகாவின் கார்வாரில் இந்தியாவின் முதல் உள்நாட்டு பல்நோக்குக் கப்பலான ஐஎன்எஸ் சமர்த்தக் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
  • கொச்சின் கப்பல் கட்டும் நிறுவனத்தால் கட்டப்பட்ட இந்திய கடற்படையின் மூன்றாவது மாஹே-வகுப்பு நீர்மூழ்கி எதிர்ப்பு ஆழமற்ற நீர் கப்பலான ஐஎன்எஸ் மாங்க்ரோல் (INS Mangrol), மகாராஷ்டிராவின் மும்பையில் உள்ள கடற்படை கப்பல் துறையில் நாட்டுக்கு அர்ப்பணிக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்