TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 22 , 2026 14 hrs 0 min 16 0
  • மெரோபிடே குடும்பம் மற்றும் கோராசிஃபார்ம்ஸ் வரிசையைச் சேர்ந்த இளம் ஐரோப்பிய தேனீ உண்ணும் பறவை (மெராப்ஸ் ஏபியாஸ்டர்) தமிழ்நாட்டின் சென்னையில் முதன்முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
  • 2026 ஆம் ஆண்டு அக்டோபர் 17 முதல் 19 ஆம் தேதி வரை பிரான்சில் வாழ்க்கைச் செலவு மற்றும் எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக வன்முறைப் போராட்டங்கள் மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் நடைபெற்றன. இதில் 2,513 பேர் காவலில் வைக்கப்பட்டதுடன், பாரிஸ் மற்றும் பிற நகரங்களின் சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
    • இத்தாலியின் மிலன் நகரிலும் கலவரங்கள் மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் நடைபெற்றதுடன் அங்கு குறைந்தது 270 ஆர்ப்பாட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
  • ஆதித்யா-L1 விண்கலமானது அதன் புலப்படும் உமிழ்வு வரி ஒளிவட்ட வரைவி (VELC) கருவியைப் பயன்படுத்தி சூரிய கரோனாவின் டாப்ளர் திசைவேகப் படங்களை உருவாக்கியுள்ளதுடன் இது சூரிய பிளாஸ்மா இயக்கம் மற்றும் ஒளிவட்டப் பெரு வெடிப்புகளின் (CME) திசையை ஆய்வு செய்ய அறிவியலாளர்களுக்கு உதவுகிறது.
    • VELC தரவைச் செயலாக்குவதற்கான மென்பொருளை இந்திய வான் இயற்பியல் நிறுவனம் (IIA) உருவாக்கியுள்ளது; CMEகள் என்பவை சூரியனிலிருந்து வெளியேற்றப்படும் வெப்பமான பிளாஸ்மாவின் பெரிய மேகங்களாகும், இவை பூமிக்கு அருகிலுள்ள விண்வெளியில் இடையூறுகளை ஏற்படுத்தும்.
  • ககன்யான் திட்டத்தின் போது பூமிக்குள் மீண்டும் நுழைவதற்கு முன்பு இரண்டு தொகுதிகளும் பாதுகாப்பாகப் பிரிவதைச் சரிபார்க்கும் வகையில், கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் (VSSC) இஸ்ரோ 'குழு தொகுதி' மற்றும் 'சேவை தொகுதி' (CM-SM) பிரிப்பு சோதனைகளை நிறைவு செய்துள்ளது.
    • ககன்யான் என்பது இந்தியாவின் முதல் மனித விண்வெளிப் பயணத் திட்டமாகும். இந்திய விண்வெளி வீரர்களை பூமியின் தாழ்வான சுற்றுப்பாதைக்கு அனுப்பி அவர்களைப் பாதுகாப்பாக பூமிக்குக் கொண்டு வருவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • அதிர்ச்சிகரமான காயங்கள், அவற்றைத் தடுக்கும் முறைகள் மற்றும் சரியான நேரத்தில் மருத்துவ சிகிச்சை அளிப்பதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த ஆண்டுதோறும் அக்டோபர் 17 அன்று உலகப் பேரதிர்ச்சி/காயங்கள் விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப்படுகிறது.
    • 2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு Building a Safer Future with Trauma Care என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்