TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 23 , 2026 16 hrs 0 min 67 0
  • ராஜஸ்தானின் ஜெய்சால்மரில் போர் தயார்நிலை மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த ராணுவ நடவடிக்கைகளை சோதிப்பதற்காக இந்திய ராணுவம் அகண்ட் பிரஹார்-II (Akhand Prahar-II) கூட்டுப் பயிற்சியை மேற்கொண்டது.
  • ஏ.பி. முல்லர்-மெர்ஸ்க் (A.P. Moller-Maersk) நிறுவனம் 2026 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் சென்னை அருகே உள்ள லார்சன் அண்ட் டூப்ரோ (L&T) காட்டுப்பள்ளி கப்பல் கட்டும் தளத்தில் தனது சிங்கப்பூர் கொடியிடப்பட்ட கொள்கலன் கப்பலான மெர்ஸ்க் சட்டோகிராமுக்கான (Maersk Chattogram) முதல் உலர் கப்பல்துறை (drydocking) பராமரிப்புப் பணிகளை இந்தியாவில் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.
    • உலர் கப்பல்துறை என்பது ஆய்வு, பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பதற்காக ஒரு கப்பலை தண்ணீரிலிருந்து வெளியே எடுப்பதை உள்ளடக்கியதாகும்.
  • ஜிம்பாப்வேயில் வசிக்கும் 14 வயதான இங்கிலாந்து புகைப்படக் கலைஞர் ஆஸ்கார் விட்ஃபீல்ட், 2026 ஆம் ஆண்டின் இளம் வனவிலங்கு புகைப்படக் கலைஞர் விருதை வென்றார்.
  • இந்தியாவில் முற்றிய உணவுக்குழாய் செதிள் உயிரணு புற்றுநோய்க்காக (Esophageal Squamous Cell Carcinoma - ESCC) சைடோர்வி (டோரிபாலிமாப்) மருந்தை பயன்படுத்த டாக்டர் ரெட்டிஸ் லேபரட்டரீஸ் நிறுவனம் இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஜெனரலிடம் (DCGI) இருந்து ஒப்புதல் பெற்றுள்ளது.
    • உணவுக்குழாய் செதிள் உயிரணு புற்றுநோய் (ESCC) என்பது ஒரு வகையான உணவுக்குழாய் புற்றுநோயாகும், இதில் உணவுக்குழாயின் உட்புறத்தில் உள்ள செதிள் உயிரணுக்களில் புற்றுநோய் உருவாகிறது.
  • வாழும் பாரம்பரியத்தின் பன்முகத்தன்மையைக் கொண்டாடுவதற்காகவும், அதைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தச் செய்வதற்காகவும் ஆண்டுதோறும் அக்டோபர் 17 அன்று அருவப் பண்பாட்டு மரபுக்கான சர்வதேச தினம் அனுசரிக்கப்படுகிறது.
    • 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் நடைபெற்ற 42வது யுனெஸ்கோ பொது மாநாட்டில் இந்த நாள் அறிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்