TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 25 , 2026 14 hrs 0 min 55 0
  • அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடைபெற்ற 2026 ஆம் ஆண்டு U23 உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரின் ஆடவர் 55 கிலோ கிரெக்கோ-ரோமன் பிரிவில் இந்திய மல்யுத்த வீரர் விஸ்வஜித் ராமச்சந்திர மோர் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
  • தமிழ்நாடு ஊதியம் வழங்கும் சட்டம் 1951-இல் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின் மூலம், 2026 ஆம் ஆண்டு அக்டோபர் 1 முதல் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்களின் மாதாந்திர ஊதியம் ₹1.05 லட்சத்தில் இருந்து ₹1.80 லட்சமாக 71% உயர்த்தப்பட்டுள்ளது.
  • இந்தோனேசியாவில் ஏற்பட்ட கடுமையான காட்டுத்தீயால் தென்கிழக்கு ஆசியா முழுவதும் நச்சுப் புகை பரவி, சிங்கப்பூர், மலேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன, செப்டம்பர் மாத இறுதியில் சுமார் 1.9 மில்லியன் ஹெக்டேர் நிலப்பரப்பு எரிந்து போனதாகப் பதிவாகியுள்ளது.
  • இந்தியக் கடற்படை மற்றும் சிங்கப்பூர் குடியரசு கடற்படை இடையேயான 33-வது சிங்கப்பூர்-இந்தியா இருதரப்புக் கடல்சார் பயிற்சி (SIMBEX)-2026, ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் தொடங்கியது.
  • சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு கோட்பாட்டளவில் முன்மொழியப்பட்ட நுண்துளைகள் கொண்ட 3D கார்பன் பொருளான டயமண்டினை, கோதன்பர்க் பல்கலைக்கழகம், சால்மர்ஸ் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் மற்றும் ஸ்டாக்ஹோம் பல்கலைக்கழக அறிவியலாளர்கள் ஒருங்கிணைத்து உருவாக்கி உள்ளனர்.
    • டயமண்டின் என்பது வைரம் போன்ற 3D கட்டமைப்பைத் தக்க வைத்துக் கொள்ளும் ஒரு கார்பன் புறவேற்றுமை வடிவமாகும், ஆனால் இது ஒற்றை மற்றும் முப்பரிமாண கார்பன்-கார்பன் பிணைப்புகளைக் கொண்டிருப்பதால், அதன் கட்டமைப்பை மிகவும் திறந்த மற்றும் நுண்துளைகள் கொண்டதாக மாற்றுகிறது.
  • இந்திய கடலோரக் காவல்படை (ICG) தனது 50-வது ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சென்னையில் இருந்து 'அந்தாரா' பாய்மரப் படகில் தனது முதல் கடல் பயணத்தைத் தொடங்கியது.
    • இந்தக் குழுவினர் இந்தியாவின் கடற்கரையோரமாக சென்னையிலிருந்து கொச்சிக்கும், பின்னர் மாலத்தீவு மற்றும் இலங்கைக்கு சர்வதேச பயணங்களையும் மேற்கொள்வார்கள்.
  • திக்குவாய் மற்றும் அதனால் பாதிக்கப்படுபவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றிய விழிப்புணர்வை பரப்புவதற்காக ஆண்டுதோறும் அக்டோபர் 22 அன்று சர்வதேச திக்குவாய் விழிப்புணர்வு தினம் அனுசரிக்கப்படுகிறது.
    • 2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு "Shades of Stuttering – What’s yours?" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்