TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 29 , 2026 14 hrs 0 min 9 0
  • பிரேசிலின் 2026 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் ஃபிளாவியோ போல்சனாரோவை தோற்கடித்து லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா வெற்றி பெற்று, தனது நான்காவது பதவிக்காலத்தை உறுதி செய்தார்.
  • இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 11 வயது இங்கிலாந்து செஸ் வீராங்கனையான போதனா சிவானந்தன், ஜூடிட் போல்கார் (ஹங்கேரி) வசமிருந்த 38 ஆண்டுகால சாதனையை முறியடித்து, மிகக் குறைந்த வயதில் சர்வதேச மாஸ்டர் (IM) பட்டம் வென்ற வீராங்கனை என்ற சிறப்பைப் பெற்றார்.
  • 2029 ஆம் ஆண்டு நடைபெறும் சீனியர் உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியை அகமதாபாத் தொகுத்து வழங்கும் என்றும், சீனியர் பிரிவிலான இப்போட்டியை இந்தியா நடத்துவது இதுவே முதல் முறை என்றும் சர்வதேச பளுதூக்குதல் கூட்டமைப்பு (IWF) உறுதிப்படுத்தியுள்ளது.
  • கேரள சிவில் விமானப் போக்குவரத்து மேம்பாட்டுக் கூட்டுறவுச் சங்கம் மூலம் இந்தியாவின் முதல் கூட்டுறவுத் துறை விமானச் சேவையாக முன்மொழியப்பட்ட 'கோ-கேரளம்' (Co-Keralam) என்ற விமானச் சேவையைத் தொடங்க கேரளா ஒப்புதல் அளித்துள்ளது.
    • இது கொச்சியிலிருந்து செயல்படத் திட்டமிடப்பட்டுள்ளதுடன், கோழிக்கோடு, கண்ணூர், பெங்களூரு, மங்களூரு, சென்னை, கோயம்புத்தூர் மற்றும் மதுரை ஆகிய நகரங்களை இணைக்கவுள்ளது.
  • ஒலி-ஒளி ஆவணங்களைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்தும், எதிர்கால சந்ததியினருக்கு அவை கிடைப்பதை உறுதிசெய்வது குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, ஆண்டுதோறும் அக்டோபர் 27 அன்று உலக ஒலி-ஒளி பாரம்பரிய தினம் அனுசரிக்கப்படுகிறது.
    • 2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு Your Window to the World என்பதாகும்.
  • இயங்குபடத்தினை ஒரு கலை வடிவமாகக் கொண்டாடுவதற்காகவும், இயங்குபடக் கதைகளுக்கு உயிரூட்டும் கலைஞர்கள் மற்றும் ஸ்டுடியோக்களை/கலையகங்களை அங்கீகரிப்பதற்காகவும் ஆண்டுதோறும் அக்டோபர் 28 அன்று சர்வதேச அனிமேஷன்/இயங்குபடத் தினம் அனுசரிக்கப்படுகிறது.
    • 2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு “BEYOND BORDERS” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்