TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 30 , 2026 15 hrs 0 min 40 0
  • மைசூருவின் பன்னிமண்டபத்தில் நடைபெற்ற மைசூரு தசரா ஆளில்லா விமானக் கண்காட்சியில் 3,473 ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தி ஒரு பறவையின் மிகப்பெரிய வான்வழி கண்காட்சிக்கான கின்னஸ் உலக சாதனைப் பட்டத்தை வென்ற மயில் உருவம் அமைக்கப்பட்டது.
  • NIFTEM-K ஆனது பிரான்ஸை தளமாகக் கொண்ட இலாப நோக்கற்ற அமைப்பான ஹேக் தி ஃபோர்க், NIFTEM-K திறன் புரதத் திட்டம் மற்றும் தி குட் ஃபுட் இன்ஸ்டிடியூட் இந்தியா ஆகியவற்றுடன் இணைந்து, இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் உணவுத் தொழில்நுட்ப ஹேக்கத்தானான “ஹேக் தி ஃபோர்க்” (Hack the Fork) நிகழ்ச்சியை நடத்தியது.
  • புகுபஸிற்காக (Buquebus) கட்டப்பட்ட உலகின் மிகப்பெரிய மின்கல-மின்சாரக் கப்பலான 'சினா சோரில்லா' (China Zorrilla), அர்ஜென்டினா மற்றும் உருகுவே இடையே உள்ள பியூனஸ் அயர்ஸ்-கொலோனியா வழித்தடத்தில் தனது வணிகச் சேவையைத் தொடங்கியுள்ளது.
  • 2026 ஆம் ஆண்டிற்கான சிறந்த வனவிலங்கு புகைப்படக் கலைஞர் போட்டியில், இந்திய புகைப்படக் கலைஞர் சீதாராம் ராவ்ல் தனது 'ஷிஃப்டிங் சாண்ட்' (Shifting Sand) என்ற புகைப்படத்திற்காக 'நடத்தை: முதுகெலும்பற்றவைகள்' (Behaviour: Invertebrates) எனும் பிரிவில் வெற்றி பெற்றார்.
  • கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மீசைப்புலிமலையின் உயரமான சரிவுகளில் நீலக்குறிஞ்சி (ஸ்ட்ரோபிலாந்தஸ் குந்தியானா) மலர்கள் முழுமையாகப் பூத்துக் குலுங்குவதால், சுற்றுலாப் பயணிகளுக்காக இது திறக்கப்பட்டுள்ளது.
    • மீசைப்புலிமலை என்பது மூணார் பகுதியில் உள்ள மிக உயர்ந்த சிகரங்களில் ஒன்றாகும்; நீலக்குறிஞ்சி மலர்கள் பொதுவாக 2,500 மீட்டருக்கு மேல் பூக்காத காரணத்தால், இந்த மலர்கள் இங்கு பூத்திருப்பது மிகவும் அரிதான நிகழ்வாகக் கருதப் படுகிறது.
  • சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் (MoRTH), E85 மற்றும் E100 போன்ற அதிக எத்தனால் கலக்கப்பட்ட எரிபொருட்களுக்காக வடிவமைக்கப்பட்ட வாகனங்களை ஆதரிக்கும் வகையில், மத்திய மோட்டார் வாகன விதிகள், 1989-இல் திருத்தம் கொண்டு வந்துள்ளதுடன்  E85 என்பது 85% எத்தனால் கலந்தும், E100 என்பது முக்கியமாக முழுமையான எத்தனால் கொண்டும் இருக்கும்.
    • இந்தத் திருத்தத்தின் மூலம் உமிழ்வுச் சான்றிதழ் விதிமுறைகளில் E100 சேர்க்கப் பட்டுள்ளது, இதனால் சான்றளிக்கப்பட்ட வாகனங்கள் பொருந்தக்கூடிய உமிழ்வு மற்றும் பாதுகாப்புத் தரங்களைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்