TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 31 , 2026 21 days 173 0
  • இந்தியாவின் தேசிய தொலைத்தொடர்பு மருத்துவ சேவையான மின்னணு-சஞ்சீவனி, நாடு முழுவதும் சுமார் 50 கோடி தொலைத்தொடர்பு மருத்துவ ஆலோசனைகளை வழங்கியுள்ளது.
    • ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் இது 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கப்பட்டது.
  • மத்திய தரைக்கடல் பகுதியில் பிரான்ஸ் மற்றும் ஐக்கிய பேரரசு இணைந்து அணு ஆயுதத் தாக்குதலை உருவகப்படுத்தும் தங்களது முதல் கூட்டுப் பயிற்சியை "ரம்மி" என்ற பெயரில் நடத்தின.
    • மேற்கு ஐரோப்பாவில் அணு ஆயுதம் கொண்ட ஒரே நாடுகள் பிரான்ஸ் மற்றும் ஐக்கிய பேரரசு மட்டுமே, மேலும் இவை இரண்டும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் (UNSC) நிரந்தர உறுப்பினர்களாகவும் உள்ளன.
  • காங்கோ ஜனநாயகக் குடியரசில் (DRC) ஜைர் எபோலா வைரஸ் திரிபுக்கு எதிராக அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியான எர்வெபோ (Ervebo), புண்டிபுக்யோ வைரஸுக்கும் எதிராகப் பாதுகாப்பு அளிக்கிறதா என்பதைப் பரிசோதிக்க டுமைனி (Tumaini) பரிசோதனையைத் தொடங்க உலக சுகாதார நிறுவனம் (WHO) ஆதரவளித்தது.
    • கடுமையான நோய் மற்றும் மரணத்தை ஏற்படுத்தும் எபோலா வைரஸ் வகையான புண்டிபுக்யோ வைரஸ் முதன்முதலில் 2007 ஆம் ஆண்டு உகாண்டாவின் புண்டிபுக்யோ மாவட்டத்தில் கண்டறியப்பட்டது.
  • ஊதியம் பெறும் மற்றும் ஊதியம் பெறாத பராமரிப்புப் பணிகளை அங்கீகரிக்கும் வகையிலும், சிறந்த பராமரிப்பு அமைப்புகளை மேம்படுத்தும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 29 அன்று ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச பராமரிப்பு மற்றும் ஆதரவு தினத்தை அனுசரிக்கிறது.
    • 2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு “Building Sustainable Care and Support Systems through Decent Work” என்பதாகும்.
  • ஆயுதக் குறைப்பு மற்றும் ஆயுதக் கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஐக்கிய நாடுகள் சபை 2026 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24 முதல் 30 ஆம் தேதி வரை ஆயுதக் குறைப்பு வாரத்தை அனுசரிக்கிறது.
    • 2026 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் ஆயுதக் குறைப்பு வாரத்தின் கருத்துரு "Disarm for Peace: Fewer Weapons, Safer Communities" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்