லேசர் ஒளியைப் பயன்படுத்தி அணுக்களை குளிர்விப்பதற்கும் மற்றும் பொறிக்குள் அகப்படுத்துவதற்குமான வழிமுறைகளைக் கண்டறிந்ததற்காக 1997 ஆம் ஆண்டில் இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பகிர்ந்து கொண்ட பிரெஞ்சு இயற்பியலாளர் கிளாட் கோஹன்-தன்னூட்ஜி தனது 93வது வயதில் காலமானார்.
கோவா ஷிப்யார்டு லிமிடெட் (GSL) நிறுவனமானது கோவாவில் நான்காவது அடுத்த தலைமுறை ரோந்து கப்பலான (NGOPV) ஐஎன்எஸ் சிருஷ்டியை அறிமுகப்படுத்தியது.
இந்தியா-கொரியக் குடியரசு கடற்படைகளின் (IN-RoKN) 2026 ஆம் ஆண்டிற்கான இருதரப்பு கடல்சார் பயிற்சி தென் கொரியாவின் பூசான் கடற்படைத் துறைமுகத்தில் நடைபெற்றது.
இந்திய உயிரியல் வேளாண் தீர்வுகள் சங்கம் (BASAI) கென்யாவுடனான ஒத்துழைப்பு உட்பட உயிரியல் வேளாண்மையில் சர்வதேச கூட்டாண்மைகளை ஆராய்ந்து வருகிறது.
இந்த உத்தேச ஒத்துழைப்பானது வேளாண் ஆராய்ச்சி, தொழில்நுட்பம் மற்றும் உயிரியல் தீர்வுகளில் அறிவுப் பரிமாற்றம் மற்றும் கூட்டு செயல்பாடுகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
அமெரிக்கா (முதலிடம்) மற்றும் சீனாவுக்கு (இரண்டாம் இடம்) அடுத்தபடியாக ₹22 லட்சம் கோடி மதிப்புடன் உலக அளவிலான வாகனத் தொழில்துறையில் ஜப்பானைப் பின்னுக்குத் தள்ளி இந்தியா உலகின் மூன்றாவது பெரிய நாடாக உருவெடுத்துள்ளது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
அளவீட்டுத் தரநிலைகளின் உலகளாவிய ஒத்திசைவை மேம்படுத்தவும், சர்வதேச வர்த்தகத்தை எளிதாக்கவும், நுகர்வோரைப் பாதுகாக்கவும், சட்ட அளவியல் குறித்த சர்வதேசக் குழுவின் (CIML) 61வது கூட்டத்தை இந்தியா முதல்முறையாக புதுதில்லியில் நடத்தியது.
நிலையான நகரமயமாக்கல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்தவும், அனைவரையும் உள்ளடக்கிய, பாதுகாப்பான, நெகிழ்வான மற்றும் நிலையான நகரங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கவும் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 31 அன்று உலக நகரங்கள் தினம் அனுசரிக்கப்படுகிறது.
2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு "Regenerating the City: Adequate Housing for All" என்பதாகும்.