பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ரஃபேல் மரைன் போர் விமானமானது, இந்தியாவின் உள்நாட்டு விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தில் முதல் முறையாக தரையிறங்கி புறப்பட்டது.
மகாராஷ்டிராவின் கோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள திலாரி பகுதியில் டைகாராக்ஸ் திலாரியென்சிஸ் என்ற புதிய நுண்ணிய நில நத்தை இனத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர்.
இது மேற்குத் தொடர்ச்சி மலையின் வடக்குப் பகுதிக்குச் சொந்தமான டைகாராக்ஸ் இனத்தின் இரண்டாவது அறியப்பட்ட இனமாகும், இதற்கு முன்னதாக டைகாராக்ஸ் தேவ்ரைவாசி என்ற இனம் கண்டுபிடிக்கப்பட்டது.
கஜகஸ்தானின் அஸ்தானாவில் நடைபெற்ற 2026 ஆம் ஆண்டு உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய மல்யுத்த வீராங்கனை மனிஷா பன்வாலா பெண்களுக்கான 59 கிலோ ஃப்ரீஸ்டைல் பிரிவில் தங்கம் வென்றார்.
கூகுளின் சன்கேட்சர் திட்டமானது, ஜெம்மா 4 AI மாடலை ஒரு செயற்கைக்கோள் மாதிரியில் வெற்றிகரமாகச் சோதித்ததில் இடம்பெற்றுள்ள டென்சர் செயலாக்க அலகு-ஐப் (TPU) பயன்படுத்தி AI-ஆல் உருவாக்கப்பட்ட பதிலை பூமிக்குத் திரும்ப அனுப்பியதுடன் விண்வெளி அடிப்படையிலான AI கணினியின் சாத்தியக்கூறுகளை நிரூபித்துள்ளது.
டெல்லி மற்றும் கவுகாத்தியை இணைக்கும் அதிவேக ரயில் திட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி ஒப்புதல் அளித்துள்ளார்.
உத்தரப் பிரதேசம், பீகார் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய டெல்லி-ஆக்ரா-கான்பூர்-லக்னோ-அயோத்தி-வாரணாசி-பிரயாக்ராஜ்-பாட்னா-சிலிகுரி-கவுகாத்தி ஆகியவை இத்திட்டத்தின் உத்தேச வழித்தடமாகும்.