அமெரிக்காவைச் சேர்ந்த கிளவுட் உள்கட்டமைப்பு நிறுவனமான Vultr, AMD Instinct MI355X கிராபிக்ஸ்/வரைகலை செயலாக்க அலகுகளால் (GPUs) இயக்கப்படும் 20 மெகாவாட் (MW) செயற்கை நுண்ணறிவு (AI) சூப்பர் கிளஸ்டரை/தொகுதிகளை சென்னையில் அறிமுகப்படுத்தியது.
இந்திய விமானப்படையின் 29-வது தலைமை தளபதியாக பொறுப்பேற்ற ஏர் மார்ஷல் அசுதோஷ் தீட்சித்துக்குப் பிறகு, ஏர் மார்ஷல் இந்தர்பால் சிங் வாலியா இந்திய விமானப்படையின் துணைத் தளபதியாக (VCAS) பொறுப்பேற்றார்.
டேராடூனைச் சேர்ந்த தொழில்நுட்பக் கல்வியாளர் பிரசாந்த் சவுத்ரி, ஊரக வளர்ச்சிக்கான சிறந்த பங்களிப்பிற்கான ஐந்தாவது ரோகிணி நய்யார் விருதை வென்றார்.
இந்திய புவியியல் ஆய்வு மையத்தின் (GSI) 55-வது தலைமை இயக்குநராக திரு தினேஷ் விட்டல்ராவ் கன்வீர் பொறுப்பேற்றார்.
சண்டிகர் காவல்துறை தனது 60 ஆண்டு கால சேவையைக் குறிக்கும் வகையில், 2026 ஆம் ஆண்டு நவம்பர் 1 அன்று நடைபெற்ற வைர விழா கொண்டாட்டங்களின் போது குடியரசுத் தலைவரின் வண்ண விருதைப் (President's Colour) பெற்றது.
சுனாமி ஆயத்த நிலை மற்றும் அபாயக் குறைப்பை ஊக்குவிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 5 அன்று உலக சுனாமி விழிப்புணர்வு தினம் அனுசரிக்கப்படுகிறது.
2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு Be Tsunami Ready: Resilience Starts with You என்பதாகும்.