நிர்மலா லட்சுமணன் எழுதிய The Tamils: A Portrait of a Community என்ற புத்தகத்திற்காக, சிறந்த சர்வதேச புனைகதை அல்லாத புத்தகத்திற்கான ஷார்ஜா விருதை வென்றார்.
இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான இருதரப்பு முப்படை மனிதநேய உதவி மற்றும் பேரிடர் நிவாரண (HADR) பயிற்சியான 'டைகர் ட்ரையம்ப் 2026' இன் ஐந்தாவது பதிப்பு, விசாகப்பட்டினத்தில் உள்ள கடல்சார் போர் மையத்தில் தொடங்கியது.
'மதர்ஸ் ஆஃப் கரேஜ்' (Mothers of Courage) என்ற ஆவணப்படம், படைப்பாற்றல் பிரிவில் 2026 ஆம் ஆண்டுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான மேம்பாட்டு இலக்குகள் (UN SDG) செயல் விருதை வென்றது.
1895 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி வில்ஹெல்ம் கான்ராட் ராண்ட்ஜென் எக்ஸ்-கதிர்களைக் கண்டுபிடித்ததைக் குறிக்கும் வகையிலும், சுகாதாரத்துறையில் மருத்துவப் படமாக்கலின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையிலும், ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச கதிரியக்கவியல் தினம் (IDoR) கொண்டாடப்படுகிறது.
2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு Upholding Patient Safety என்பதாகும்.
ஆரோக்கியமான மற்றும் வாழத்தகுந்த சமூகங்களை உருவாக்குவதில் நகர்ப்புற திட்டமிடலின் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதற்காக, ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 8 ஆம் தேதி உலக நகரமயமாக்கல் தினம் (உலக நகரமைப்புத் திட்டமிடல் தினம் என்றும் அழைக்கப்படுகிறது) அனுசரிக்கப்படுகிறது.