கர்நாடகாவின் மங்களூருவில் 80,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட இந்தியாவின் மிகப்பெரிய நிலத்தடி திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு (LPG) சேமிப்புக் கிடங்கை பிரதமர் நாட்டிற்கு அர்ப்பணித்தார்.
இந்தியாவும் மலேசியாவும் தங்களது கூட்டு இராணுவப் பயிற்சியான ‘ஹரிமாவ் சக்தி’யின் 6-வது பதிப்பை 2026 ஆம் ஆண்டு நவம்பர் 18 முதல் 30 ஆம் தேதி வரை நடத்தவுள்ளன.
மகாராஷ்டிராவின் புனே மாவட்டத்தில் உள்ள சாஸ்வாட்டில் இந்தியாவின் முதல் சாலைப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் நிறுவப்பட்டு வருகிறது.
மத்தியப் பிரதேசத்தின் கட்னியைச் சேர்ந்த 22 வயதான சதுரங்க வீரர் அனுஜ் ஸ்ரீவத்ரி, இந்தியாவின் 100-வது சதுரங்க கிராண்ட்மாஸ்டராகவும் (GM), மத்தியப் பிரதேசத்தின் முதல் கிராண்ட்மாஸ்டராகவும் ஆனார்.
பிலிப்பைன்ஸில் நடைபெற்ற 7-வது ஆசியான் பிளஸ் தனிநபர் ஓபன் சதுரங்க சாம்பியன்ஷிப் – ஆளுநர் ஹென்றி எஸ். ஓமினல் கோப்பையை வென்றதன் மூலம் அவர் இப்பட்டத்தைப் பெற்றார்.
தொழில்நுட்பம் மற்றும் தயாரிப்புகளில் பயன்பாட்டுத்திறன், அணுகல்தன்மை மற்றும் மனிதனை மையப்படுத்திய வடிவமைப்பை ஊக்குவிப்பதற்காக ஆண்டுதோறும் நவம்பர் மாதத்தின் இரண்டாவது வியாழக்கிழமையன்று (நவம்பர் 12) 2026 ஆம் ஆண்டு உலகப் பயன்பாட்டுத்திறன் தினம் கொண்டாடப்படுகிறது.
2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு “Designing a Sustainable Future with Ethical AI” என்பதாகும்.