இந்திய விலங்கியல் ஆய்வு மையம் (ZSI) மற்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சி சபை - மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையம் (ICAR-CMFRI) ஆகியவற்றைச் சேர்ந்த இந்திய அறிவியலாளர்கள், இந்தியப் பெருங்கடலில் இந்தியன் பிராம்பிள்/முள் சுறா (எக்கினோரைனஸ் ரோயினி) எனப் பெயரிடப்பட்ட ஒரு புதிய ஆழ்கடல் சுறா இனத்தைக் கண்டறிந்துள்ளனர்.
இது முன்னர் அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள சுறா இனத்தைப் போன்றது எனத் தவறாக வகைப்படுத்தப்பட்டிருந்தது, ஆனால் தற்போது ஒரு தனித்துவமான இனமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
நவி மும்பையின் நெரூலில் உள்ள பாம் பீச் சாலைக்கு அருகிலுள்ள டி.எஸ். சாணக்யா ஈரநிலங்களில், கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு வாட்டர் ரெயில்/நீர்க் கானாங்கோழி (ராலஸ் அக்வாடிகஸ்) பறவை காணப்பட்டது.
இந்த இனம் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் (IUCN) செந்நிறப் பட்டியலில் 'தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம்' (Least Concern - LC) என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள ஸ்டார்பேஸிலிருந்து ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் தனது ஸ்டார்ஷிப் விண்கலத்தின் 15-வது சோதனைப் பயணத்தை மேற்கொண்டது; இது சுற்றுப்பாதைக்குச் சென்று மீண்டும் ஏவுதளத்திற்கே திரும்பும் தனது முதல் முழுப் பயணத்தை அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மும்பையைச் சேர்ந்த தாக்கரே வனவிலங்கு அறக்கட்டளையின் ஆராய்ச்சியாளர்கள், அருணாச்சலப் பிரதேசத்தின் மேல் சியாங் மாவட்டத்தில் 'பெகோனியா சியாங்கென்சிஸ்' (Begonia siangensis) எனப் பெயரிடப்பட்ட ஒரு புதிய தாவர இனத்தைக் கண்டறிந்துள்ளனர்.
சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களை நினைவுகூரவும், அவர்களது குடும்பத்தினரைக் கௌரவிக்கவும், சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தவும் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை (2026 ஆம் ஆண்டு நவம்பர் 16) 'சாலை விபத்துகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உலக நினைவு தினம்' அனுசரிக்கப்படுகிறது.
2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு “Remember. Support. Act.” என்பதாகும்.
நாடுகடந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுப்பதிலும் எதிர்த்துப் போராடுவதிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உலகளாவிய ஒத்துழைப்பை மேம்படுத்தவும் ஐக்கிய நாடுகள் சபை ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 15 ஆம் தேதியை 'நாடுகடந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கு எதிரான சர்வதேச தினமாக' அனுசரிக்கிறது.
2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு “Follow the Money. Stop Organized Fraud.” என்பதாகும்.