TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 20 , 2026 11 hrs 0 min 24 0
  • இந்தியக் கடற்படையின் அடுத்த தலைமுறை கடலோர ரோந்துக் கப்பலான (NGOPV) 'சிருஷ்டி', கோவாவில் உள்ள கோவா கப்பல் கட்டும் தளத்தில் (GSL) அறிமுகப்படுத்தப்பட்டது.
  • அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள ஸ்டார்பேஸ் ஏவுதளத்தில் தனது 15-வது சோதனைப் பயணத்தின் போது, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் தனது ஸ்டார்ஷிப் விண்கலத்தை இயந்திர ரோபோட்டிக் கைகளைப் பயன்படுத்தி வெற்றிகரமாகப் பிடித்தது; இது ஒரு விண்கலத்தை இவ்வாறு வெற்றிகரமாகப் பிடித்த முதல் நிகழ்வாகும்.
  • துருக்கியில் பாசுமதி அரிசிக்கான புவிசார் குறியீடு (GI) அங்கீகாரத்தை பாகிஸ்தான் பெற்றுள்ளது.
  • இலண்டனில் நடைபெற்ற விழாவில், பிரித்தானிய கல்வியாளர் எட்மண்ட் ரிச்சர்ட்சன் தனது Alexander: God, King, Man என்ற நூலுக்காக 2026 ஆம் ஆண்டிற்கான புனைவுக் கதை அல்லாத பிரிவில் பெய்லி கிஃபோர்ட் பரிசை (Baillie Gifford Prize) வென்றார்.
  • செனகலின் டாக்கரில் நடைபெற்ற 2026 ஆம் ஆண்டிற்கான இளையோர் ஒலிம்பிக் போட்டியில், இந்திய பேட்மிண்டன் வீராங்கனை தன்வி பத்ரி மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டிக்கு முன்னேறி, இச்சாதனையைப் படைத்த முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றார்.
  • 1939 ஆம் ஆண்டில் நாஜிப் படையினரின் துன்புறுத்தலுக்கு ஆளான செக் மாணவர்களின் தியாகங்களை நினைவுகூரும் வகையிலும், மாணவர்களின் உரிமைகள், கல்விச் சமத்துவம், சுதந்திரம் மற்றும் சர்வதேச ஒற்றுமையை மேம்படுத்தும் வகையிலும் ஆண்டுதோறும் நவம்பர் 17 அன்று சர்வதேச மாணவர் தினம் அனுசரிக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்