கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள இந்தியாவின் முதல் LED குவிமாடம் கொண்ட கோளரங்கமான காஸ்மோஸ்-மைசூரு (COSMOS-Mysuru) கோளரங்கத்தை இந்தியப் பிரதமர் திறந்து வைத்தார்.
தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள தொலைத்தொடர்புத் துறை (DoT), புது தில்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் அலுவல் மொழி குறித்த முதலாவது அகில இந்திய மாநாடு 2026-ஐ நடத்தியது.
அரசு நிர்வாகம் மற்றும் அதிகாரப்பூர்வத் தகவல்தொடர்புகளில் இந்தி (ராஜ்பாஷா) மொழியின் படிப்படியான பயன்பாட்டை ஊக்குவிப்பதே இம்மாநாட்டின் நோக்கம் ஆகும்.
உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலைத் தொடர்ந்து, 2026 ஆம் ஆண்டு டிசம்பர் 15 முதல் அமலுக்கு வரும் வகையில், தனியார் கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கான நான்கு அடுக்கு மோட்டார் காப்பீட்டுக் கட்டமைப்பை இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDAI) அறிமுகப்படுத்தியுள்ளது.
மூன்றாம் தரப்புப் பொறுப்பு, பயணிகள் அல்லது பின்னால் அமர்ந்து செல்பவர்களுக்கான சட்டப்பூர்வப் பொறுப்பு, தனிநபர் விபத்துக் காப்பீடு மற்றும் சொந்த வாகனச் சேதக் காப்பீடு ஆகியவை இந்த நான்கு கூறுகளாகும்.
இந்தியா முழுவதும் தொலைத்தொடர்பு வலையமைப்பின் செயல்பாட்டைக் கண்காணிக்கவும் காட்சிப்படுத்தவும் 'நெட்வொர்க் அனுபவ்' (Network Anubhav) தளத்தை இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) அறிமுகப்படுத்தியுள்ளது.
"மத்திய அமைச்சகங்கள்/துறைகளால் அதிகபட்ச கட்டிடங்களில் சூரிய ஒளி மின்சக்தி அமைக்கப்பட்டதற்கான" பிரிவில் முதலிடம் பிடித்ததற்காக, புது தில்லியில் குடியரசுத் துணைத் தலைவர் சி. பி. ராதாகிருஷ்ணனிடமிருந்து ரயில்வே அமைச்சகம் 'PM சூர்ய கர் சிறப்பு விருது 2026'-ஐப் பெற்றது.
2024 ஆம் ஆண்டு பிப்ரவரியில் தொடங்கப்பட்ட 'PM சூர்ய கர்: முஃப்த் பிஜ்லி யோஜனா' திட்டம், ஒரு கோடி வீடுகளில் மேற்கூரை சூரிய ஒளி மின்சக்தி அமைப்புகளை நிறுவுவதையும், தகுதியான வீடுகளுக்கு மாதந்தோறும் 300 யூனிட்கள் வரை இலவச மின்சாரம் வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
பாதுகாப்பான சுகாதாரத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அனைவருக்கும் கழிப்பறை வசதியை ஊக்குவிக்கவும், சுகாதாரம், பொதுச் சுகாதாரம் மற்றும் பாலினச் சமத்துவம் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பை எடுத்துரைக்கவும் ஆண்டுதோறும் நவம்பர் 19 அன்று உலகக் கழிப்பறை தினம் அனுசரிக்கப்படுகிறது.
2026 ஆம் ஆண்டிற்கான இதன் கருத்துரு Safe toilets. Equal futures என்பதாகும்.
உலகெங்கிலும் உள்ள பெண் தொழில்முனைவோரைக் கொண்டாடவும், ஆதரிக்கவும் மற்றும் அதிகாரமளிக்கவும் ஆண்டுதோறும் நவம்பர் 19 அன்று மகளிர் தொழில் முனைவோர் தினம் அனுசரிக்கப் படுகிறது.