TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 27 , 2026 16 hrs 0 min 28 0
  • 2026 ஆம் ஆண்டு நவம்பர் 22 அன்று சென்னையில் உள்ள பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் வெள்ளை வால் கொண்ட கழுகு (White-tailed Eagle) காணப்பட்டது, இது தமிழ்நாடு மற்றும் தென்னிந்தியாவில் பதிவு செய்யப்பட்ட முதல் நிகழ்வாகும்.
  • மொசாம்பிக் சுதந்திரப் போராட்ட வீரரும் பெண்கள் உரிமை ஆர்வலருமான கிராசா மச்செல் (Graça Machel) புதுதில்லியில் 2025 ஆம் ஆண்டிற்கான அமைதி, ஆயுதக் குறைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான இந்திரா காந்தி பரிசைப் பெற்றார்.
  • மங்களூரு அருகே உள்ள கெஞ்சர் புல்வெளிகளில் அரிய வகை வில்லோ வார்ப்ளர்/இலைக் பாடற்குருவி (Willow Warbler) பறவை காணப்பட்டது, இது கர்நாடகாவில் உறுதிப்படுத்தப்பட்ட முதல் பதிவாகவும் இந்தியாவில் பதிவான ஐந்தாவது பதிவாகவும் அமைந்துள்ளது.
  • ஒடிசாவின் சிமிலிபால் புலிகள் காப்பகத்தில் ஹார்முரிடே (Hormuridae) குடும்பத்தைச் சேர்ந்த லியோசெலஸ் சிமிலிபாலென்சிஸ் (Liocheles similipalensis) என்ற புதிய தேள் இனத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர், இது இக்காப்பகத்தில் லியோசெலஸ் பேரினத்தின் முதல் உறுதிப்படுத்தப்பட்ட பதிவாகும்.
    • இந்தக் கண்டுபிடிப்பு லியோசெலஸ் பேரினத்தின் உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட இனங்களின் எண்ணிக்கையை ஆறிலிருந்து ஏழாக உயர்த்துவதோடு இந்தியாவிலிருந்து விவரிக்கப்பட்ட இப்பேரினத்தின் நான்காவது இனமாகவும் அமைகிறது.
  • ஐக்கிய பேரரசில் உள்ள செஸ்டர் உயிரியல் பூங்காவில் அரிய வகை ஒற்றைக் கொம்பு காண்டாமிருகக் கன்று பிறந்துள்ளது.
    • பெரிய ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம் (ரைனோசெரஸ் யூனிகார்னிஸ்) பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் (IUCN) அச்சுறுத்தப்பட்ட உயிரினங்களின் செந்நிறப் பட்டியலில் எளிதில் பாதிக்கப்படக்கூடிய இனமாக (Vulnerable - VU) வகைப்படுத்தப்பட்டுள்ளது.
  • கடல்சார் ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைந்த செயல்பாட்டை வலுப்படுத்தும் விதமாக, இந்தியக் கடற்படையின் ஐஎன்எஸ் சஹ்யாத்ரி (INS Sahyadri) மற்றும் ராயல் கனடியக் கடற்படையின் எச்எம்சிஎஸ் ரெஜினா (HMCS Regina) ஆகியவை இணைந்து குறுக்கு-தள ஹெலிகாப்டர் தரையிறக்கம், செங்குத்து விநியோகம் மற்றும் பாசெக்ஸ் (PASSEX) கடற்பயிற்சி ஆகியவற்றை மேற்கொண்டன.
  • சீனாவின் கிங்டாவோவில் நடைபெற்ற 2026 ஆம் ஆண்டிற்கான உலகப் படகோட்டுதல் 11வது மணி நேர பந்தய தாக்க விருதை (World Sailing 11th Hour Racing Impact Award) வென்ற முதல் இந்திய அமைப்பு என்ற பெருமையை ஹைதராபாத் படகு கிளப் (YCH) பெற்றுள்ளது.
  • பலராமபுரம் கசவு திட்டத்தின் கீழ் திருவனந்தபுரம் கனகக்குன்னு அரண்மனையில் 6,000 அடி நீளமுள்ள கசவு ஜவுளி காட்சிப்படுத்தப்பட்டது; கசவு என்பது கேரளாவின் பாரம்பரிய வெள்ளை அல்லது மங்கிய வெள்ளை நிறப் பருத்தி கைத்தறித் துணியாகும், இது தங்கக் கரையுடன் சேலைகள் மற்றும் வேட்டிகளில் பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது.
    • திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள பலராமபுரம், திருவிதாங்கூர் அரச குடும்பத்துடன் தொடர்புடைய பல நூற்றாண்டுகள் பழமையான கைத்தறி நெசவு மையமாகும்.
  • தத்துவச் சிந்தனை, விமர்சன ரீதியான பகுத்தறிவு மற்றும் பரஸ்பர புரிதலை மேம்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதத்தின் மூன்றாவது வியாழக்கிழமையன்று (2026 ஆம் ஆண்டு நவம்பர் 19) உலகத் தத்துவ தினம் கொண்டாடப்படுகிறது.
    • 2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு Living the Earth Together என்பதாகும்.
  • தகவல் தொடர்பு, தகவல் பகிர்வு மற்றும் உலகமயமாக்கலில் தொலைக்காட்சியின் பங்கை அங்கீகரிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 21 அன்று உலகத் தொலைக்காட்சி தினம் அனுசரிக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்