TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 1 , 2019 2152 days 1037 0
  • மன்னார் வளைகுடா பகுதியில் நிகழ்ந்த உயிரியல் வளங்கள் குறித்த ஆய்வின் போது 62 புதிய இனங்கள் மற்றும் 77 புதிய பாறை ஒட்டுப் பகுதிகள் சமீபத்தில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.
    • இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மொத்த இனங்கள் 4,285 ஆகும்.
  • மத்திய குடிமைப் பணிகள் (ஓய்வூதிய) விதிகளின் அடிப்படை விதி 56 (J) இன் கீழ் ஊழல் மற்றும் பிற குற்றச்சாட்டுகள் தொடர்பாக மேலும்  15 மூத்த  வரித் துறை அதிகாரிகளுக்கு மத்திய நேரடி வரி வாரியம் (Central Board of Direct Taxes - CBDT) கட்டாயமாக ஓய்வு அளித்துள்ளது.
  • 23 வயது அமெரிக்கரான கிறிஸ்டியன் கோல்மன் என்பவர் தோஹாவில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியின் 100 மீட்டர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
  • பெல்ஜியத்தின் கென்ட்டில் நடைபெற்ற டூர்னோய் செயற்கைக்கோள் போட்டியில் (உலக அளவில்) மகளிர் செபர் தனிநபர் பிரிவில் இந்திய வாள் வீச்சு வீரரான (ஃபென்சர்) பவானி தேவி வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்