TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 6 , 2019 2534 days 1429 0
  • இந்தியாவில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமை நகர்ப்புறப் போக்குவரத்துத் துறையில் 1 பில்லியன் யூரோ முதலீடு செய்யப்படும் என்று ஜெர்மனியப் பிரதமரான ஏஞ்சலா மெர்க்கல் உறுதியளித்துள்ளார்.
  • “நீதிக்காக சமமான அணுகல் மற்றும் சட்டத்தின் ஆட்சி” என்ற தலைப்பின் கீழ் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் காமன்வெல்த் சட்ட அமைச்சர்கள் மாநாடானது இலங்கையில் உள்ள கொழும்புவில் நடைபெற்றது.
  • ஒடிசா மாநிலமானது “ஒரே பாரதம் வளமான பாரதம்” என்ற திட்டத்தின் கீழ் மகாராஷ்டிராவுடன் இணைத்துக் குறிக்கப் பட்டுள்ளது. ஒடிசா மாநிலம் “உத்கல்” என்றும் அழைக்கப் படுகின்றது. இதன் பொருள் சிறந்த கலை மற்றும் கலாச்சாரத்தின் நிலம் என்பதாகும்.
  • உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின் கீழ் அமைக்கப்பட்ட  சுற்றுச்சூழல் மாசு (தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) ஆணையமானது (Environment Pollution (Prevention and Control) Authority – EPCA) தில்லி மற்றும் தேசியத் தலைநகர்ப் பகுதியில் பொதுச் சுகாதார அவசர நிலையை அறிவித்துள்ளது. இது அங்கு கட்டுமான நடவடிக்கைகள் மற்றும் பட்டாசுகள் வெடிப்பதைத் தடை செய்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்