TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 11 , 2020 1854 days 827 0
  • துகள் உலோகத்திற்கான மேம்படுத்தப்பட்ட ஆராய்ச்சி மையமானது மெக்கின்ஸ் தொழில் நிறுவனத்துடன் இணைந்து கோவிட் – 19 நோயாளிகளுக்கு வேண்டிய  கிருமிநாசினிக்காக புற ஊதாக் கதிரை அடிப்படையாகக் கொண்ட சிற்றறை அல்லது கேபினெட்டை உருவாக்கியுள்ளது.
  • இந்திய அரசானது இதுவரை 2020-21 ஆண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.1,01,500 கோடி ரூபாயை ஒதுக்கி உள்ளது.
    • இந்தத் திட்டம் தொடங்கியதிலிருந்து இதற்காக ஒதுக்கப்பட்ட மிக அதிக அளவிலான நிதி இதுவாகும்.
  • அதானி பசுமை ஆற்றல் நிறுவனமானது மத்திய அரசால் நிர்வகிக்கப்படும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆணையமான இந்திய சூரிய ஒளி ஆற்றல் கழகத்திடமிருந்து (Solar Energy Corporation of India) 6 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு மதிப்புள்ள உலகின் மிகப்பெரிய சூரிய ஒளி ஆற்றல் ஏலத்தில் வென்று உள்ளது.
    • இந்தத் திட்டத்தின் கீழ், இந்தக் குழுமமானது 8000 மெகாவாட் திறன் கொண்ட ஒரு மின்னழுத்த ஆற்றல் ஆலையை அமைக்க இருக்கின்றது. மேலும் இது 2000 மெகா வாட் திறன் கொண்ட உள்நாட்டு சூரிய ஒளித் தகடுகள் அடங்கிய ஒரு ஆலையையும் அமைக்க இருக்கின்றது.
  • உத்தரகாண்ட் மாநில அரசானது உலக சுற்றுச்சுழல் தினத்தன்று ஹால்ட்வானியில் தனது மிகப்பெரிய பல்லுயிர்ப் பெருக்கப் பூங்காவைத் திறந்துள்ளது.
    • இந்தப் பூங்காவில் பல்வேறு தாவர இனங்களானது உத்தரகாண்ட்டின் நிடி மானா பள்ளத்தாக்கு போன்ற பல்வேறு நிலப்பரப்புகளிலிருந்து கொண்டு வரப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்