December 6 , 2020
1717 days
773
- உத்தரகாண்ட் மாநிலமானது கலாதுங்கி-நைனிடால் என்ற நெடுஞ்சாலையின் குறுக்கே தனது முதலாவது சுற்றுச்சூழல் சார் பாலத்தைக் கட்டமைக்கின்றது.
- இந்தப் பாலமானது மூங்கில், புல் மற்றும் கயிறு போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களால் முழுவதும் கட்டமைக்கப்பட்டு இருக்கின்றது.
- இராஜஸ்தான் முதல்வரான அசோக் கெலாட் அவர்கள் நாட்டின் முதலாவது உறுப்பு தான நினைவகத்தை ஜெய்ப்பூரில் திறந்து வைத்தார்.
- பேட்டா நிறுவனத்தின் உலகளாவிய தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப் பட்ட முதலாவது இந்தியராக சந்தீப் கட்டாரியா என்பவர் உருவெடுத்துள்ளார்.
- மக்களவையின் சபாநாயகரான ஓம் பிர்லா அவர்கள் மக்களவையின் பொதுச் செயலாளராக மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான உத்பல் குமார் சிங் என்பவரை கேபினட் செயலாளர் அந்தஸ்தில் நியமித்துள்ளார்.
- மேலும் சபாநாயகர் அவர்கள் இந்தப் பதவியிலிருந்து விடைபெறும் சினேகலதா ஸ்ரீவத்சவா என்பவரை மக்களவையின் ஒரு கௌரவ அதிகாரியாகவும் நியமித்து உள்ளார்.
Post Views:
773