December 20 , 2020
1704 days
817
- நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரானது கோவிட் – 19 நோய்த் தொற்றின் காரணமாக ரத்து செய்யப் படவுள்ளது.
- இது மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சரான பிரல்ஹாத் ஜோஷி அவர்களால் தெரிவிக்கப் பட்டுள்ளது.
- இந்தியக் கடலோரப் பாதுகாப்புப் படையின் இடைமறிப்புப் படகானது குஜராத்தில் உள்ள ஹசிராவில் பணியில் சேர்க்கப்பட்டது.
- அமெரிக்கத் தேர்தல் குழுவானது 306 வாக்குகள் வழங்கி ஜோ பைடனின் வெற்றியை அதிகாரப் பூர்வமாக அறிவித்து உள்ளது.
- வங்க தேசமானது 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 14 அன்று தியாகிகள் அறிவுசார் தினத்தை அனுசரித்தது.
- இது 1971 ஆம் ஆண்டு வங்க தேசத்தில் நிகழ்ந்த இனப்படுகொலையைக் குறிப்பதற்காக அனுசரிக்கப் படுகின்றது.
Post Views:
817