January 22 , 2021
1582 days
701
- இந்தியாவானது வங்க தேசத்திற்கு 2 மில்லியன் என்ற அளவிற்கு கோவிஷீல்டு தடுப்பூசிகளை நன்கொடையாக அளிக்கவுள்ளது.
- கோவிஷீல்டு என்ற தடுப்பூசியானது உள்நாட்டிலேயே இந்தியாவின் சீரம் நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப் படுகின்றது.
- நேபாளத்தைச் சேர்ந்த மலையேற்ற வீரர்கள் குளிர் காலத்தில் உலகின் இரண்டாவது மிக உயரமான சிகரமான கே2 சிகரத்தில் ஏறிய முதலாவது குழுவினர் ஆவர்.
- இந்த சிகரமானது காரகோரம் வரம்பில் கில்ஜிட்-பலுசிஸ்தான் எல்லைப் புறத்தில் அமைந்துள்ளது.
- மேற்கு வங்கத்தில் உள்ள மகாநந்தா என்ற வனவிலங்குச் சரணாலயத்தில் ஒரு பறவைத் திருவிழாவானது நடத்தப்பட உள்ளது.
- மேற்கு வங்கத்தில் இதே வகையைச் சேர்ந்த ஒரு திருவிழா நடத்தப்படுவது இதுவே முதல்முறையாகும்.
- பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 1000 கோடி மதிப்பு கொண்ட ”ஸ்டார்ட் அப் இந்தியா தொடக்க நிறுவனங்களுக்கான நிதியை” தொடங்கியுள்ளார்.
- இது ”பிராரம்ப் : ஸ்டார்ட் அப் இந்தியா சர்வதேச மாநாடு - 2021” என்ற மாநாட்டில் அறிவிக்கப் பட்டது.
Post Views:
701