TNPSC Thervupettagam

TNWESafe திட்டம் மற்றும் HPV தடுப்பூசி இயக்கம்

January 30 , 2026 18 days 130 0
  • தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின், தமிழ்நாடு உலக மகளிர் உச்சி மாநாடு 2026-ல் தமிழ்நாடு மகளிர் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டம் (TNWESafe) மற்றும் மனித பாப்பிலோமா வைரஸ் (HPV) தடுப்பூசித் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
  • மகளிரின் பாதுகாப்பு மற்றும் வேலைவாய்ப்பை மேம்படுத்துவதற்காக, உலக வங்கியின் கடனுதவியுடன் TNWESafe திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
  • HPV தடுப்பூசித் திட்டம் அரியலூர், தருமபுரி, பெரம்பலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் தொடங்கப்பட உள்ளது.
  • இந்தத் தடுப்பூசித் திட்டத்தின் மூலம் 14 வயதுக்கு மேற்பட்ட 3,38,649 சிறுமிகள் பயனடைவார்கள்.
  • கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுக்க 14 வயது சிறுமிகளுக்கு மாநிலம் தழுவிய இலவச மனித பாப்பிலோமா வைரஸ் (HPV) தடுப்பூசி திட்டத்தைத் தொடங்கிய முதல் மாநிலமாக தமிழ்நாடு ஆனது.
  • இந்தியாவின் முதல் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட, மலிவு விலையில் குவாட்ரிவேலண்ட் தடுப்பூசி, CERVAVAC, சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா (SII) ஆல் உருவாக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்