சனிக்கோளின் அளவை ஒத்த ஒரு வாயு நிரம்பிய இராட்சத கோளானது, வழக்கத்திற்கு மாறான ஒரு சிறிய செந்நிறக் குள்ள நட்சத்திரத்தைச் சுற்றி வருவது கண்டறியப்பட்டு உள்ளது.
இந்த அரிய இணைவானது சிறிய நட்சத்திரங்கள் அவற்றைச் சுற்றியுள்ள வட்டுகளில் இவ்வளவு பெரிய கோள்களை உருவாக்க போதுமான கூறுகளைக் கொண்டிருக்காது என்று கூறும் தற்போதைய மாதிரிகளை மறுக்கின்றது.
TOI-6894 என பெயரிடப்பட்ட இந்த நட்சத்திரமானது சூரியனின் நிறையின் ஐந்தில் ஒரு பங்கு மட்டுமே ஆகும்.
TOI-6894 ஆனது புவியிலிருந்து சுமார் 240 ஒளி ஆண்டுகள் தொலைவில் லியோ என்ற விண்மீன் திரளில் உள்ளது.
இது ஒரு பெரிய கோளினைக் கொண்டிருக்கும் மிகச்சிறிய அறியப்பட்ட நட்சத்திரம் ஆகும்.
இந்தக் கிரகம் ஆனது தோராயமாக மூன்று நாட்களில் ஒரு சுற்றுப்பாதை பயணத்தை நிறைவு செய்கிறது.
புவியானது சூரியனுக்கு எவ்வளவு அருகில் உள்ளதோ, அதே போல இக்கோள் ஆனது அதன் நட்சத்திரத்திற்கு சுமார் 40 மடங்கு அருகில் உள்ளது.
நமது சூரிய மண்டலத்திற்கு வெளியே காணப்படும் இதர மற்ற கிரகங்களை விட இது மிகவும் குளிர்ந்ததாக உள்ளது.