எத்தியோப்பிய அரசானது சமீபத்தில் தனது தீவிரவாதக் குழுக்கள் பட்டியலில் TPLF (Tigray People’s Liberation Front) மற்றும் OLF-ஷேன் ஆகியவற்றைச் சேர்த்துள்ளது.
2020 ஆம் ஆண்டில் எத்தியோப்பியா, TPLFக்கு எதிராக ஒரு மாபெரும் இராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது.
TPLF எத்தியோபியாவில் 1975 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு அரசியல் கட்சியாகும்.
மேலும் TPLF ஒரு ஆயுதமேந்திய இனம் சார்ந்த தேசியவாதக் கிளர்ச்சிக் குழுவாகும்.
தைக்ரே அரசு மற்றும் எத்தியோப்பிய அரசுக்கு இடையேயான இந்த மோதல் கடந்த முப்பது ஆண்டுகளாக நடந்து வருகிறது.