TNPSC Thervupettagam
June 24 , 2025 3 days 44 0
  • தஞ்சாவூர் மாவட்டத்தின் ஆடுதுறையில் உள்ள தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிறுவனம் (TRRI), சம்பா மற்றும் தாளடி பயிர்ப் பருவங்களுக்கு என பிராந்தியம் சார்ந்த, குறைந்த உள்ளீடுகள் தேவைப்படும் நெல் வகைகளைப் பயன்படுத்தி முன்கூட்டியே திட்டமிடச் செய்யுமாறு விவசாயிகளை வலியுறுத்தியுள்ளது.
  • டெல்டாவில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒரு நெல் வகையான TPS5 என்பது, மற்ற இடங்களில் 100 நாட்களில் முதிர்ச்சியடைகிறது, ஆனால் டெல்டா பகுதிகளில் இதற்கு 125 நாட்கள் ஆகிறது.
  • இது தாமதமான அறுவடைகள், அதிகமான அளவு பூச்சி தாக்குதல் மற்றும் அதிகரித்த செலவினங்களை ஏற்படுத்துகிறது.
  • ADT 53, 55, 56, மற்றும் 57 போன்ற குறுவை சாகுபடி நெல் வகைகளை இதற்காக TRRI பரிந்துரைத்தது.
  • ADT 57 என்பது நேரடி விதைப்புக்கு ஏற்றது மற்றும் ADT 55 பாக்டீரியா இலை கருகல் (BLB) பாதிப்பிற்கு எதிரான தாங்குதிறனையும் கொண்டுள்ளது.
  • ADT 53 ஆனது புழுங்கல் அரிசி வகைக்கான ஒரு நல்ல மாற்றாகவும், மேலும் ADT 59 ரகமானது இட்லி அரிசிக்கு விரும்பத் தக்கதாகவும் உள்ளன.
  • உப்பு நீர் மற்றும் கடலோரப் பகுதிகளின் முனை பகுதிகளுக்கு, TRY (திருச்சி அரிசி) 1 முதல் 5 வரையிலான வகைகள் சிறந்தவையாக உள்ளன.
  • வெள்ளத்தால் பாதிக்கப்படும் டெல்டா பகுதிகளுக்கு, CR1009 என்ற துணை 1 ரகமானது பரிந்துரைக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்