நாசாவின் டேன்டெம் மறு இணைப்பு மற்றும் கஸ்ப் மறு ஆய்வு செயற்கைக்கோள்கள் (TRACERS) கலம் ஆனது, ஸ்பேஸ்எக்ஸ் பால்கன் 9 ஏவு கலத்தின் மூலம் விண்ணில் ஏவப் பட்டது.
TRACERS ஆனது காந்த மறு இணைப்பை ஆய்வு செய்யும் இரட்டை விண்கலங்களைக் கொண்டுள்ளது.
காந்த மறு இணைப்பு என்பது சூரியக் காற்று ஆனது காந்த விளிம்பு மண்டல எல்லையில் பூமியின் காந்தப்புலத்துடன் தொடர்பு கொள்ளும் ஒரு முக்கியச் செயல் முறையாகும்.
காந்த மறு இணைப்பு என்பது செயற்கைக் கோள்கள், மின் கட்டமைப்புகள் மற்றும் GPS அமைப்புகளை பாதிக்கும் விண்வெளி சார் வானிலை விளைவுகளை உண்டாக்குகின்ற காந்தப்புலங்கள் எவ்வாறு துண்டிக்கப்பட்டு மீண்டும் இணைக்கப் படுகின்றன என்பதைப் புரிந்து கொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
TRACERS மற்ற சிறிய செயற்கைக்கோள்களுடன் சேர்ந்து ஏவப்படுகிறது, அவற்றில் பின்வருவன அடங்கும்:
பூமியின் வெப்ப உமிழ்வு மற்றும் பருவநிலையை ஆய்வு செய்வதற்கான Economical Payload Integration Cost (EPIC) கலம்.
புதிய விண்வெளி தொடர்பு வலையமைப்பு மாற்றத்தைச் சோதிக்கின்றப் பல மொழிப் பரிசோதனை முனையம் (PexT).
பூமியைச் சுற்றியுள்ள தீங்கு விளைவிக்கும் "கில்லர் எலக்ட்ரான்களை" பகுப்பாய்வு செய்கின்ற சார்பியல் எலக்ட்ரான் வளிமண்டல இழப்பு (REAL) ஆய்வுக் கலம்.